வேலைக்காக வெளிநாடு சென்று கஷ்டப்பட்டு சம்பாரிக்கலாம் என நினைக்கும் போது அவர்களுக்கு பெரிய சுமையாக இருப்பது சில விஷமிகள் தான். காசை கொடுத்து ஏஜென்ட்களிடம் ஏமாறும் சிலரை போல காசே இல்லை உங்களுக்கு சிங்கப்பூரில் வேலை வாங்கி தருகிறோம் என சிலரும் கிளம்பி இருக்கிறார்கள்.
இதுகுறித்து விசாரித்ததில், தமிழ்நாட்டில் இருக்கும் இளைஞர்கள் சிலருக்கு சிங்கப்பூரில் இருக்கும் ST engineering கம்பெனியில் இருந்து safety officer பணிக்கு S pass தயார் செய்து கொண்டிருப்பதாக Globus Manpower consultant என்ற கம்பெனி கால் செய்து இருக்கிறது.
இதை கேட்டவருக்கோ குழப்பம் அப்படி ஒரு கம்பெனி இருக்கா இவர்கள் சொல்வது உண்மையா என மிகப்பெரிய குழப்பத்தில் இருக்கிறார். தொடர்ந்து, அதே Globus தரப்பில் இருந்து கால் செய்து free of costல் இந்த வேலையை உங்களுக்கு வாங்கி தருகிறோம்.
இதையும் படிங்க: சிங்கப்பூரில் வேலை செய்ய ஆசையா… டிகிரி படிச்சிருந்தாலே போதும் S-Pass இருக்கு… S Pass வாங்க இதை Follow பண்ணுங்க..
தொடர்ந்து, சிங்கப்பூரில் இருந்து கால் வந்திருக்கிறது. நேர்காணல் போல நடந்த இந்த உரையாடலில் விவரங்களை கேட்டிருக்கின்றனர். தொடர்ந்து, உங்க ஏரியாவில் இருக்கும் ஏஜென்ட் மற்றும் சிங்கப்பூர் ஏஜென்ட் யாருக்கும் காசு கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டதாம்.
இதில் நீங்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் சிங்கப்பூர் வருவதற்கு வீட்டு வேலை செய்யும் பெண்களை தவிர மற்ற எல்லா விசாவிற்கும் குறைந்தது 2 முதல் 3 லட்ச ரூபாய் செலவு ஆகும். இது எதுவும் இல்லை என யாரும் கூறினால் கண்டிப்பாக இது ஏமாற்று வேலையாக தான் இருக்கும்.
மேலும், உங்களுக்கு S Pass யாரும் அப்ளே செய்துள்ளதாக போனில் குறிப்பிட்டால் சிங்கப்பூரின் MOM தளத்தில் உங்க பாஸ்போர்ட் எண்ணை போட்டு செக் செய்து கொள்ளுங்கள். அடுத்ததாக, செலவே இல்லாமல் உங்களை சிங்கப்பூர் அழைத்து வந்தால் கூட உங்களுக்கு அந்த வேலை பாதுகாப்பானதாக அமையாது.
இப்படி எதுவும் வேலை சம்மந்தப்பட்ட போலி கால்கள் உங்களுக்கு வந்தால் 1800 722 6688 என்ற எண்ணில் புகார் அளிக்கவும்.