TamilSaaga

சிங்கப்பூர் கப்பல் கட்டும் தளத்தில் விபத்து.. தூக்கி வீசப்பட்ட 2 வெளிநாட்டு ஊழியர்கள் – கண்ணிமைக்கும் நேரத்தில் பிரிந்த உயிர்

சிங்கப்பூர் நிறுவனமான கெப்பல் கார்ப்பரேஷனுக்குச் சொந்தமான துவாஸில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் இருந்து தூக்கி வீசப்பட்ட இரண்டு வங்காளதேசத் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். .

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மனிதவள அமைச்சகம் (MOM), 30 மற்றும் 42 வயதுடைய அந்த தொழிலாளர்கள், சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

51 Pioneer செக்டார் 1 இல் கப்பல்துறையின் மேல் ஒரு கட்டமைப்பைச் சுற்றி சாரக்கட்டு ஒன்று கட்டப்பட்டிருந்தது. அதில், மூன்று தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர்.

90 நாட்கள் வரை கெட்டுப் போகாத “ஆவின் பால்”.. தமிழகத்தில் இருந்து சிங்கப்பூருக்கு ஏற்றுமதி.. அசர வைக்கும் “Tetra Packet” தொழில்நுட்பம் – வைரலாகும் வீடியோ

அப்போது, இரவு 10 மணியளவில் அந்த கட்டமைப்பு திடீரென இடிந்து விழுந்தது, இதனால் சாரக்கட்டின் ஒரு பகுதி கப்பலில் இருந்து அறுந்து விழுந்ததால், இரண்டு தொழிலாளர்கள் தூக்கி எறியப்பட்டனர்.

பிறகு, இரவு 10.30 மணியளவில் போலீசார் அங்கு விரைந்த போது, இருவரது உடலில் எந்த அசைவும் இல்லை. அவர்களது உயிர் எப்போதோ பிரிந்திருந்தது.

Keppel Offshore மற்றும் Marine-க்கு சொந்தமான துணை நிறுவனமான Keppel Shipyard-க்காக நடந்த பணியின் போதுதான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இறந்துபோன இரு ஊழியர்களில், ஒருவர் இந்த நிறுவனத்தில் பணிபுரிபவர் தான். மற்றொரு தொழிலாளர் Veekee இன்ஜினியரிங் நிறுவனத்தில் பணிபுரிந்தவர் என்று MOM தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து சிங்கப்பூர் மனிதவளத்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது மற்றும் கப்பலில் உள்ள கட்டமைப்புகள் சம்பந்தப்பட்ட அனைத்து வேலைகளையும் நிறுத்துமாறு கெப்பல் ஷிப்யார்டிற்கு அறிவுறுத்தியுள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts