சிங்கப்பூரில் கிராப் ஓட்டுநர் ஒருவர் 16 வயது மாணவியை தனது காரில் அழைத்துச் சென்றபொது அந்த சிறுமியின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பல கேள்விகளைக் கேட்டுள்ளார். அந்த சிறுமியை ஒதுக்குப்புறமான ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்வதற்கு முன், அந்த சிறுமியின் உதட்டில் முத்தமிட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். முகமது ரஸின் முகமது உமர் என்ற அந்த 27 வயது நபருக்கு, நேற்று வியாழன் (ஜனவரி 20) அன்று 15 மாத சிறைத்தண்டனையும், மூன்று பிரம்படிகளையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மன்னார்குடியின் மண் வீடுகளை மாடி வீடுகளாக்கிய “சிங்கப்பூர் தந்தை” லீ குவான் யூ – மாபெரும் சகாப்தம்!
கடந்த நவம்பர் 21, 2020 அதிகாலையில் பாதிக்கப்பட்டவரை ரஸின் அழைத்துச் சென்றதாக நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றது. வீட்டிற்கு புறப்பட தயாரான அந்த சிறுமி அந்த காரின் பின் இருக்கையில் அமர்ந்துள்ளார். பயணத்தின் போது, ரஸின் அந்தப் பெண்ணுடன் உரையாடலைத் தொடங்கினார், அவளது வயது, அவளது மேல்நிலைப் பள்ளி மற்றும் அவளுடைய தனிப்பட்ட வாழ்க்கை ஆகியவற்றை குறித்து பல கேள்விகளை கேட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு வயது 16 என்று கூறி அந்த குற்றவாளியின் கேள்விகளுக்கு பதிலளித்த நிலையில் அவரது செல்போன் ந,நம்பரையும் கேட்டுள்ளார். இறுதியில் “எங்காவது போக வேண்டுமா?” என்றும் வினைவியுள்ளார். அந்த காமக்கொடூரன் பேசுவதை புரிந்துகொள்ளமுடியாத சிறுமி சரி என்று பதிலளிக்க ரஸின் தனது வாகனத்தை ஜூரோங்கிற்கு அருகில் உள்ள புலிம் தெருவில் ஒரு ஒதுக்குப்புறமான இடத்திற்கு ஓட்டிச் சென்று, மங்கலான வெளிச்சம் உள்ள இடத்தில் காரை நிறுத்தியுள்ளார். காரில் இருந்து இறங்கிய அவர், பாதிக்கப்பட்டவரை வாகனத்தில் இருந்து இறங்கி எதாவது பேசுமாறு கேட்க அந்த சிறுமியும் இறங்கி பேசத்துவங்கியுள்ளார்.
பின்னர் அவர் பாதிக்கப்பட்ட நபருடன் காருக்குள் மீண்டும் நுழைந்து. இதற்கு முன் ஆண்களை முத்தமிட்டீர்களா என்று அந்தப் சிறுமியிடம் கேட்க அவர் இல்லை என்று கூறியுள்ளார். அதிகாலை 1.45 மணியளவில், ரஸின் திடீரென பாதிக்கப்பட்ட பெண்ணின் உதடுகளில் பலமுறை முத்தமிட அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட பெண், “வேண்டாம்” என்று கூறி அவரை தள்ளிவிட்டுள்ளர். Razin தயங்காமல் பாதிக்கப்பட்டவரின் கையைப் பிடித்து, அவரது இடுப்பு பகுதியில் வைக்க பாதிக்கப்பட்ட சிறுமி தன் கையை விளக்கியுள்ளார். ஆனால் ரஸின் அவள் கையை பிடித்து அவனிடம் பாலியல் செயலை செய்யும்படி வற்புறுத்தியுள்ளான்.
தன்னை வீட்டில் இறக்கிவிடுமாறு கேட்ட நிலையில் அவரை வீட்டில் இறக்கிவிட்டு பயணத்திற்கான பணத்தை கேட்கும்போது முத்தமும் கேட்டுள்ளார். ஆனால் சிறுமி பயந்து வீட்டிற்குள் சென்று அதன் பிறகு போலீசில் புகார் செய்துள்ளார்.