TamilSaaga

திருச்சி – சிங்கப்பூர் : பிப்ரவரி மாதத்தில் 20 விமானங்களை இயக்கும் Scoot : கோவை, திருவனந்தபுரம் சேவையும் உண்டு

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் இருந்து தமிழகம் உள்பட இந்தியாவின் பல பகுதிகளுக்கு இடையே பல விமான சேவை நிறுவனங்கள் விமானங்களை இயக்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சிங்கப்பூரில் Omicron பரவல் அதிகரித்துள்ள காரணத்தால் சிங்கப்பூர் தனது VTL சேவைகள் வழியாக சிங்கப்பூருக்குள் வர தற்காலிக தடையை விதித்தது. ஆனால் அந்த தடையும் நேற்று இரவு 11.59 மணியுடன் முடிவடைந்துள்ளது. சிங்கப்பூரில் பதிவாகும் புதிய Omicron வழக்குகளில் 70 சதவிகிதம் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வருபவர்களிடையே தான் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள் : “16 வயது மாணவி” : ஒதுக்குபுறமான இடத்திற்கு கூட்டிச்சென்ற சிங்கப்பூர் Grab ஓட்டுநர் – சட்டம் தன் கடமையை செய்தது!

இந்நிலையில் இந்த இக்கட்டான சூழலில் சிங்கப்பூரின் பட்ஜெட் ஏர்லைன்ஸ் நிறுவனமான Fly Scoot தற்போது தமிழகத்தின் கோவை முதல் சிங்கப்பூருக்கு எல்லா வாரங்களிலும் புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் விமானங்களை இயக்கவுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 29ம் தேதி துவங்கி இந்த கோவை – சிங்கப்பூர் சேவை செயல்பட்டு வருகின்றது என்பது நினைவுகூரத்தக்கது. இந்நிலையில் 5 இந்திய நகரங்களில் இருந்து சேவைகளை NON VTL மூலம் வழங்குகிறது Scoot.

ஏற்கனவே புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வாரம்தோறும் விமானங்களை இயக்கி வந்த நிலையில் தற்போது NONVTL மூலம் திருச்சி மற்றும் சிங்கப்பூர் மற்றும் சிங்கப்பூர் – திருச்சி இருமார்கமாக வரும் பிப்ரவரி மாதத்தில் அதிக அளவிலான விமானங்களை இயக்கவுள்ளது Scoot. இதற்கான முன்பதிவுகளும் தற்போது நடைபெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிப்ரவரி மாதம் 20 விமானங்களை இருமார்கமாக இயக்கவுள்ளது.

Scoot விமான டிக்கெட்கள் புக் செய்ய இங்கே கிளிக் செய்யவும்..

இதையும் படியுங்கள் : சிங்கப்பூர்.. கழுத்தில் கேபிள் சிக்கிய பரிதாப நிலையில் “ராட்சச பல்லி” : குப்பைகளால் இந்த அவல நிலையா?

பிப்ரவரி 1,3,4,6.7,8,10,11,13,14,15,17,18,20,21,22,24,25,27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் Scoot விமானங்கள் திருச்சி சிங்கப்பூர் மார்க்கமாக இயக்கப்படும். அதே போல வாரம்தோறும் புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் கோவையில் இருந்தும் அதேபோல வாரம் தோறும் செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய கிழமைகளில் திருவனந்தபுரத்தில் இருந்தும் சிங்கப்பூருக்கு இருமார்கமாக சேவைகள் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts