TamilSaaga

“பயிற்சியாளராக பணியாற்ற சிங்கப்பூர் வந்த இளம் பெண்” : மூன்று நாட்களாக காணவில்லை – இறுதியில் கிடைத்தது?

சிங்கப்பூருக்கு ஒரு டியூஷன் சென்டரில் பாடமெடுக்க வந்த 22 வயது மலேசியப் பெண் ஒருவர், மூன்று நாட்களாகக் காணாமல் போன தேடப்பட்டுவந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை ஜனவரி 18 அன்று இரவு பாசிர் ரிஸில் உள்ள அபி அபி ஆற்றில் மிதந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக Lianhe Zaobao என்ற செய்தி நிறுவனம் கூறியுள்ளது. மலேசியாவின் கெடாவைச் சேர்ந்த கூ யீ ஜூ என்ற அந்த பெண், கடந்த ஜனவரி 16, ஞாயிற்றுக்கிழமை மாலை சாய் சீயில் வேலை முடிந்த பிறகு காணாமல் போனார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள் : Big Breaking: உதயநிதி ஸ்டாலினுக்கு “ஆஸ்கர்” விருது அறிவிப்பு – சூர்யா, ஜோதிகாவுக்கும் விருது!

வேலை முடிந்து அவர் வீடு திரும்பாத நிலையில் சிங்கப்பூரில் உள்ள அவரது அத்தை பலமுறை அவரது தொலைபேசிக்கு தொடர்புகொண்டுள்ளார். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்படவே திங்கள்கிழமை அதிகாலை 2 மணியளவில் காவல் நிலையத்திற்குச் சென்று அந்த பெண்ணை காணவில்லை என்று புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் தான் ஜனவரி 18ம் தேதி இரவு 7:11 மணியளவில் பாசிர் ரிஸில் உள்ள அபி அபி ஆற்றில் சடலம் ஒன்று மிதப்பது குறித்து தங்களுக்கு அழைப்பு வந்ததை போலீஸார் உறுதிப்படுத்தினர்.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றினர், அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் இறந்தவரின் அடையாளம் உறுதி செய்யப்பட்டுள்ளது மற்றும் அவரது மரணத்தில் சந்தேகப்படும்படி எந்தவித நிகழ்வு நடைபெற்றதாக தெரியவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர். தனது மகளின் சடலம் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டதாகவும், ஆனால் அவரது தனிப்பட்ட உடமைகள் அனைத்தும் காணவில்லை என்றும், அவரது கைரேகைகள் மூலம் இறந்தவரின் அடையாளத்தை அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாகவும் அந்த பெண்ணின் தாய் கூறினார்.

மலேசியாவின் கெடாவைச் சேர்ந்த அந்த பெண் அண்மையில் தான் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றும் கடந்த நவம்பர் 2021 இறுதியில் சிங்கப்பூருக்கு வந்த அவர் உள்ளூர் கல்வி மையத்தில் உதவி சீன ஆசிரியராகச் சேர்ந்துள்ளார். சிங்கப்பூரின் தோவா பயோவில் உள்ள இடத்தில் தனது அத்தையுடன் தான் அவர் வசித்து வந்துள்ளார். அந்த அத்தை தனது மருமகள் எப்போதும் வேலை முடிந்து சரியான நேரத்திற்கு வீடு திரும்புவாள் என்றும், விடுமுறை நாட்களில் தன் நண்பர்களுடன் வெளியே சென்றாலும் தன்னிடம் மறக்காமல் தெரிவிப்பாள் என்றும் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள் : விமான பணிப்பெண்ணை பின்னால் தட்டிய சக ஊழியர்” : கடுப்பான பெண்ணிடம் கூலாக பதில் சொன்ன ஆசாமி

சம்பவத்தன்று அந்த பெண்ணை கடைசியாக அவருடைய இரண்டு சகாக்கள் பார்த்துள்ளனர், வேலை முடிந்து பேருந்தில் வீட்டிற்குச் செல்வதற்காக சாய் சீ இண்டஸ்ட்ரியல் பார்க் எதிரே உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு அவர்களுடன் நடந்து சென்றுள்ளார். அப்போது, ​​ஒரே நேரத்தில் மூன்று பேருந்துகள் வர, மற்ற இரண்டு சக ஊழியர்களும் முதல் பேருந்தை நோக்கி நடக்க, அவர்கள் அந்த பெண் மூன்றாவது பேருந்தை நோக்கி நடப்பதைக் கண்டுள்ளனர். ஆனால் இறுதியில் அந்த பெண் அந்த பேருந்தில் ஏறினாரா இல்லையா என்பது குறித்து தெரியவில்லை என்று கூறியுள்ளனர்.

இருப்பினும் இந்த வழக்கு குறித்து தொடர்ச்சியாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts