TamilSaaga

மருத்துவ ரீதியான Emergency? : இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்ச, சிங்கப்பூர் Mount Elizabeth மருத்துவமனையில் அனுமதி

இதுவரை செயல்படுத்தப்படாத ஒரு நடவடிக்கையாக, இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்ச தனது பாராளுமன்றத்தை ஒரு வார காலத்திற்கு ஒத்திவைத்துவிட்டு, திட்டமிடப்படாத பயணமாக சிங்கப்பூர் வந்துள்ளார். தற்போது அவருடைய இந்த சிங்கப்பூர் பயணம் ஒரு அரசியல் ரீதியான உத்தியோகபூர்வ பயணம் இல்லை என்பதையும் மாறாக இது அவருடைய சிகிச்சைக்காக ஏற்பாடு செய்யப்பட்ட தனிப்பட்ட பயணம் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள் : துபாயில் நல்ல சம்பளத்தில் வேலை

கடந்த வெள்ளியன்று தனது அமர்வுகளை முடித்த இலங்கை பாராளுமன்றம், முதலில் ஜனவரி 11ம் தேதி கூடுவதாக இருந்தது. ஆனால் இப்போது அது ஜனவரி 18ம் தேதி மீண்டும் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதயம் சம்மந்தமான பிரச்சனையால் கோத்தபாய ராஜபக்ச தற்போது சிங்கப்பூர் வந்துள்ளதாகவும் ஆனால் இந்த பயணம் அவரே மேற்கொண்டாரா? அல்லது கொண்டுசெல்லப்பட்டாரா? என்பது குறித்த எந்தவித தகவலும் இல்லை என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

72 வயதாகும் கோத்தபாய ராஜபக்சவிற்கு ஏற்கனவே Bypass என்ற இருதய சம்மந்தமான சிகிச்சை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் சிங்கப்பூர் உள்ள Mount Elizabeth மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுவரை இலங்கை அரசு தரப்பில் இருந்தோ அல்லது Mount Elizabeth மருத்துவமனையில் இருந்தோ அவரது உடல் நிலை குறித்து எந்தவித தகவலும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் இருந்து கோத்தபாய ராஜபக்ச சிங்கப்பூர் சென்றுள்ளார் என்ற தகவலையும் உள்ளூர் செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts