TamilSaaga

சிங்கப்பூரில் சூதாட்டத்தில் இழந்த சம்பள பணம்.. Dormitory அருகில் இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை! – வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான எச்சரிக்கை பதிவு!

இந்த உலகத்தில் பணம் இல்லையெனில், நீங்கள் எவ்வளவு கூப்பாடு போட்டாலும் யாருக்கும் கேட்காது. மூணாவது மனுஷங்களை விடுங்க.. சில குடும்பத்தில், பணம் சரியா சம்பாதிக்கலனா சொந்த பொண்டாட்டி புள்ளைங்க கூட மதிக்க மாட்டாங்க. ஊர் பேச்சு, உறவுக்காரங்க பேச்சு, போறவன் வர்றவன் பேச்சு என்று எல்லா அசிங்கத்தையும் தாங்கிக் கொண்டு எப்படியாவது பொழைச்சா போதும்-னு வண்டி (ஃபிளைட்) ஏறுபவர்களின் எண்ணிக்கை ரொம்ப ரொம்ப அதிகம்.

இப்படி கல்லடிப்பட்டு, அவமானப்பட்டு ஏதோ ஒரு நாட்டுக்கு போற நம்மாளுங்க, குடும்பத்தை மறந்து சம்பாதிக்கிறது என்ற ஒன்னை மட்டும் மனசுல வைராக்கியமா வச்சு உழைக்குறாங்க. பெரிய அளவுல வளர்றாங்க. அந்த நம்பிக்கையில தான் பல பேர், வெளிநாடு போக துடிக்கிறாங்க.

அந்த வெளிநாடுகளின் வரிசையில் முதல்ல இருக்குற சாய்ஸ் எதுன்னா, அது சந்தேகமே இல்லாம நம்ம சிங்கப்பூரை சொல்லலாம். சிங்கப்பூர் ட்ரை செஞ்சு வாய்ப்பு கிடைக்காம, அரபு நாடுகள், மலேசியா-னு போனவங்க எண்ணிக்கையை கணக்கிடவே முடியாது.

மேலும் படிக்க – VTL திட்டம் மூலம் யார் யார் இப்போது சிங்கப்பூர் செல்ல முடியும்? யார் போக முடியாது? – ஆதாரத்துடன் களத்தில் இருந்து Exclusive செய்தி

அப்படி சிங்கப்பூர் வர வாய்ப்பு கிடைச்சு, இன்னைக்கு இங்கேயே செட்டில் ஆகி பெரிய ஆளா உருவாகி இருக்குற எத்தனையோ பேரை சொல்லலாம். சிலர் சிங்கப்பூரில் 10, 15 வருஷம் வேலை பார்த்து, இந்தியா போயிட்டு அங்க பெரிய அளவுல தொழில், வியாபாரம்-னு செட்டில் ஆகி இருக்கிறாங்க. இவ்வளவு ஏங்க, இருந்த ஒத்த மாட்டை வித்துட்டு, கடன உடன வாங்கி சிங்கப்பூர் வந்து, இன்னைக்கு கோடீஸ்வரர்களாக இருக்குற ஆட்களும் இருக்காங்க.

ஆனா, சிங்கப்பூரில் தங்கள் தகுதிக்கு ஏற்ற நல்ல வேலை கிடைச்சும், அதன் மூலம் நல்ல சம்பளம் கிடைச்சும் தங்களோட நிலையை உயர்த்திக்காம, அந்த பணத்தை ஊதாரித்தனமா செலவு செய்யும் சில இளைஞர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். குறிப்பாக, இந்த சூதாட்டத்தில் ஈடுபடும் சில வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கள் வாழ்க்கையே தாங்களே சீரழித்துக் கொண்டிருக்கின்றனர்.

சிங்கப்பூரை பொறுத்தவரை Remote Gambling Act (RGA) சட்டத்தில் கீழ் 18 வயதிற்கு மேற்பட்டோர் சூதாட்டத்தில் ஈடுபடலாம். அதேபோல கேசினோ கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ், நீங்கள் சட்டப்பூர்வமாக சூதாட்ட விடுதிகளில் சூதாட்டம் செய்வதற்கு முன்பு உங்களுக்கு குறைந்தபட்சம் 21 வயது நிரம்பியிருக்க வேண்டும். சிங்கப்பூரில் சூதாட்ட விடுதிகளில் நுழைவதற்கு தங்கள் வயதை குறைத்து மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டால் 1,000 டாலர் வரை அபராதம் விதிக்கப்படும்.

மேலும் படிக்க – “சிங்கப்பூரில் போட்ட தடுப்பூசி” : இந்தியாவில் இருக்கும்போது சான்றிதழ் பெறுவது எப்படி? – ஒரு Informative பதிவு

1ம் தேதி சம்பளம் வருகிறது என்றால், 31ம் தேதியே அட்வான்ஸ் புக்கிங் செய்து சூதாட்டத்தில் ஈடுபட்டு அன்று ஒரே நாளில் ஒட்டுமொத்த சம்பள பணத்தையும் இழந்து மாண்டவர்கள் ஏராளம். இதே நமது சிங்கப்பூரில் சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்து தூக்கிட்டு தற்கொலை செய்தவர்கள், தங்கியிருந்த Dormitory அருகில் இருந்த மரத்தில் தூக்கிட்டு இறந்தவர்கள் என்று பல சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன.

சூதாட்டம் மட்டுமல்ல.. பெண் மோகத்தில் சம்பள பணத்தை இழக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் எக்கச்சக்கம். இதுபோன்ற சிந்தனை வரும் போது, நம்மை நம்பி சொந்த ஊரில் கனவுகளுடன் கண் விழிக்கும் குடும்பத்தினரை நினைத்துப் பார்த்தாலே போதும். தவறு செய்யும் துணிச்சல் வரவே வராது!.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts