TamilSaaga

“சிங்கப்பூரில் அறிவிக்கப்பட்ட புதிய உள்நாட்டு எல்லை நடவடிக்கைகள்” : ஒரு Detailed Report

உலக அளவில் பரவியுள்ள இந்த தொற்றுநோயுடன் சிங்கப்பூர் வாழ உதவும் வகையில் சிங்கப்பூர் பெருந்தொற்று பல அமைச்சக பணிக்குழு நேற்று சனிக்கிழமை (அக்டோபர் 23) புதிய நடவடிக்கைகள் சிலவற்றை அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த புதிய நடவடிக்கைகள் குறித்த ஒரு விளக்கமான பதிவை தற்போது காணலாம்.

முதலில்..

முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட ஊழியர்கள் மட்டுமே அடுத்த ஆண்டு முதல் பணியிடங்களுக்கு திரும்ப முடியும். வருகின்ற ஜனவரி 1, 2022 முதல், முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட அல்லது கடந்த 270 நாட்களுக்குள் பெருந்தொற்று நோயிலிருந்து மீண்ட ஊழியர்கள் மட்டுமே பணியிடத்திற்குத் திரும்ப முடியும்.
தடுப்பூசி போடப்படாத ஊழியர்கள் அலுவலகங்களுக்கு திரும்புவதற்கு முன்பு பெருந்தொற்று எதிர்மறையாக சோதனை செய்தாலொழிய பணியிடத்திற்கு திரும்ப அனுமதிக்கப்பட மாட்டார்கள், மேலும் இந்த சோதனைகளுக்கான செலவுகளை அவர்கள் செலுத்த வேண்டும், என்று MOH தெரிவித்துள்ளது.

இரண்டாவதாக..

சினோவாக் தடுப்பூசி தேசிய தடுப்பூசி திட்டத்தில் சேர்க்கப்படும், தொற்றுநோய் சிறப்பு அணுகல் பாதை (PSAR) கீழ் தடுப்பூசிக்கு சுகாதார அறிவியல் ஆணையத்தின் இடைக்கால அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. சினோவாக் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களைப் பெற்ற அனைத்து நபர்களும் இரண்டாவது டோஸுக்குப் நான்கு மாதங்களுக்கு பிறகு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டதாகக் கருதப்படும். இருப்பினும், சினோவாக்கிற்கான முழு அளவு என்பது 3 டோஸ் ஆகும். இரண்டாவது டோஸ் பெற்ற 90 நாட்கள் கழித்து மூன்றாம் டோஸ் எடுக்கவேண்டும்.

மூன்றாவதாக..

தடுப்பூசிக்கு மருத்துவ அளவில் தகுதியற்றவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படும், தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் அனைத்து தடுப்பூசிகளுக்கும் மருத்துவ ரீதியாக தகுதியற்றவர்கள் என்று சான்றளிக்கப்பட்டால், தடுப்பூசி-வேறுபட்ட நடவடிக்கைகளில் இருந்து சிலருக்கு விலக்கு அளிக்க MOH சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது. அதாவது, அவர்கள் நவம்பர் 1 முதல் வணிக வளாகங்கள் மற்றும் வணிக மையங்கள் போன்ற வளாகங்களுக்குள் நுழைவது உள்ளிட்ட சில நடவடிக்கைகளில் பங்கேற்க முடியும்.

நான்காவதாக..

பெரும்பாலான தொற்று நோயாளிகளுக்கு பாதுகாப்பான மற்றும் இயல்புநிலை விருப்பமாக இருக்கும் வீட்டு மீட்புத் திட்டம், கர்ப்பிணி பெருந்தொற்று நோயாளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். அவர்கள் முழுமையாக தடுப்பூசி போடப்பட வேண்டும், மேலும் 35 வயதுக்குக் குறைவானவர்கள் மற்றும் 26 வாரங்களுக்கும் குறைவான கர்ப்ப காலம் கொண்டவர்களாக அவர்கள் இருக்க வேண்டும்.

Related posts