TamilSaaga

வெளிநாட்டில் பூத்த காதல்.. “தமிழ் முறை” திருமணம் தான் வேண்டும் என்று அடம்பிடித்த மணப்பெண் – காதலியின் ஆசையை நிறைவேற்றிய காதலன்

இதயங்களே..! சாதி, மதம், நாடு இவைகளைக் கடந்து வரும் காற்றைப்போல காதலையும் சுவாசிப்போம். தளபதி விஜய் நடிப்பில் வெளியான ஷாஜகான் படத்தில் வரும் இந்த வசனத்தை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியாது.

காதலின் வலிமை குறித்து பேசும் பல படங்களை நாம் பார்த்திருப்போம், அது அனைத்திலும் சொல்லப்படும் ஒரே கருத்து காதலுக்கு எந்த தடையும் கிடையாது. அதை மீண்டும் நிரூபித்துள்ளார் கோவை பகுதியை சேர்ந்த என்ஜினீயர் முத்துமாரியப்பன்.

கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்த தம்பதிகள் தான் சுப்பிரமணியன் மற்றும் தனலட்சுமி. இவர்களுடைய மகன் முத்து, டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்த நிலையில் ஆப்பிரிக்கா நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள கேம்ரூன் என்ற இடத்தில் Engineer பணியில் வேலை செய்து வந்துள்ளார்.

அவர் வேலை செய்து வந்த இடத்தில் வசித்து வந்த வால்மி இனாங்கா மொசொக்கே என்ற ஆப்பிரிக்க பெண்ணுடன் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் மச்சினனுக்கு ஆசைப்பட்டு எதுவும் அறியாத தங்கையின் வாழ்க்கையையே வீணடித்த “சகோதரன்” – தப்புக் கணக்கால் ஒரு குடும்பமே சிரித்து 4 வருஷமாச்சு!

எம்மா எஞ்சிமா மொசொக்கே என்பவரின் மகள் வால்மி, ஒரு கட்டத்தில் இருவருடைய அந்த ஆத்மார்த்தமான காதலை அடுத்தகட்டத்திற்கு எடுத்து செல்ல முடிவு செய்து, இருவரும் முறைப்படி தங்கள் பெற்றோரிடம் கூறியுள்ளனர். அவர்களும் Green Signal கொடுக்க காதல் வானில் இருவரும் சிறகடித்து பறந்துள்ளனர்.

திருமணம் நிச்சயம் தமிழ் முறைப்படி தமிழகத்தில் தான் நடக்க வேண்டும் என்று காதலி கண்டிஷன் போட, காதலர் முத்துவும் எந்த மறுப்பும் சொல்லவில்லை. சொந்தபந்தங்கள் புடைசூழ பல்லக்கில் பெண் பவனி வர நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள மண்டபத்தில் இன்று திருமணம் இனிதே அவர்களுக்கு நிறைவேறியது.

சிங்கப்பூரில் அடுத்தடுத்து தூக்குத்தண்டை விதிக்கப்படும் தமிழர்கள்.. என்ன நடக்கிறது? ஏன் சிங்கப்பூர் அரசு இவ்வளவு கடுமை காட்டுகிறது? ஒரு Complete Report

வால்மியின் சொந்தபந்தங்கள் பலர் இந்த திருமணத்தில் பங்கேற்று சிறப்பித்தார், நல்ல நேரம் பார்த்து பெரியவர்கள் தாலி எடுத்துக்கொடுக்க மணமகள் வால்மிக்கும் மணமகன் முத்துவிற்கும் திருமணம் நடந்து முடிந்தது.

முத்துவும் வால்மியும் ஆப்பிரிக்காவில் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts