TamilSaaga

VTL திட்டம் மூலம் யார் யார் இப்போது சிங்கப்பூர் செல்ல முடியும்? யார் போக முடியாது? – ஆதாரத்துடன் களத்தில் இருந்து Exclusive செய்தி

சிங்கப்பூருக்கான VTL திட்டத்தின் மூலம் விமானங்கள் மற்றும் பேருந்துகளுக்கான டிக்கெட் விற்பனை, கடந்த 2021ம் ஆண்டு டிச. 23ம் தேதி முதல் கடந்த ஜனவரி 20 இரவு 11.59 வரை முடக்கப்படும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) அறிவித்தது. கடந்த ஆண்டு டிசம்பர் 22 அன்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

வெளிநாடுகளில் இருந்து ஓமைக்ரான் பாதிப்புகள் சிங்கப்பூருக்குள் ஊடுருவதை தடுக்கும் நோக்கில் இந்த இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் அப்போது தெரிவித்தது. இந்நிலையில் கடந்த ஜன.20ம் தேதியோடு VTL தடை முடிந்த நிலையில், மீண்டும் அதன் சேவைகள் தொடங்கி இயக்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க – “சிங்கப்பூரில் போட்ட தடுப்பூசி” : இந்தியாவில் இருக்கும்போது சான்றிதழ் பெறுவது எப்படி? – ஒரு Informative பதிவு

ஆனால், யார் யார் இந்த VTL மூலம் போக முடியும், யார் யார் போக முடியாது என்பது பலருக்கும் தெரியவில்லை. இதனால், சிங்கப்பூர் செல்ல நினைக்கும் பலரும் குழப்பத்திற்கு ஆளாகின்றனர். இதுகுறித்து திருச்சி விமான நிலையத்தில் உள்ள பிரபல நந்தனா டிராவல்ஸ் உரிமையாளர் தயாளன் ராஜா தமிழ் சாகாவிடம் உண்மை நிலையை பகிர்ந்து கொண்டார். அதில், “இப்போது VTL கேட் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஆனால், யார் செல்ல முடியும், முடியாது என்பதில் சில குழப்பங்கள் நீடிக்கிறது. எனினும், Construction, Marine துறைகளை சேர்ந்தவர்களுக்கு VTL மூலம் சிங்கப்பூர் செல்ல தற்போது அனுமதியில்லை. ஆனால், அந்தத் துறைகளைச் சேர்ந்தவர்கள் இந்த உண்மை தெரியாமல், VTL மூலம் பயணிக்க முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்.

அதேசமயம், யார் இப்போது சிங்கப்பூர் செல்ல வாய்ப்புள்ளதோ, அவர்கள் ‘நமக்கென்ன பாஸ்’ மோடில் இருக்கின்றனர். Work Permit card, IPA வைத்திருப்பவர்களில் SERVICE மற்றும் MANUFACTURING என்று இருந்தால் அவர்கள் மட்டுமே இப்போது VTL மூலம் சிங்கப்பூருக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். பலருக்கும் இந்த SERVICE மற்றும் MANUFACTURING-ஐ எப்படி பார்ப்பது என்று தெரியவில்லை. அதற்காக தான் கீழே உள்ள இந்த புகைப்படம் கொடுக்கப்பட்டுள்ளது.

VTL ஓபன் ஆகிவிட்டது என்று அனைவருக்கும் தெரிகிறது. ஆனால், யார் செல்ல முடியும் என்பது தான் பலருக்கும் தெரிவதில்லை. கையில் Work Permit இருந்தால், அதில் NAME எனும் பிரிவுக்கு பக்கத்தில் SECTOR என்ற பிரிவு இருக்கும். அதில், SERVICE அல்லது MANUFACTURING என்று இருந்தால், அவர்கள் தற்போது சர்வசாதாரணமாக சிங்கப்பூர் செல்லலாம்.

அவர்களுக்கு எந்த தடையும் கிடையாது. அதுபோன்று சிங்கப்பூரில் இருந்து தமிழகம் சென்றுவிட்டு மீண்டும் return சிங்கப்பூர் வரலாம்” என்று தெரிவித்துள்ளனர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts