TamilSaaga

சிங்கப்பூர்.. “வீட்டில் தனிமைப்படுத்துதல் உத்தரவை நிறைவேற்ற போலி ஆவணம்” : வசமாக சிக்கிய நபர்

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்கிய ஒருவர் தனது வீட்டிலேயே தனிமைப்படுத்துதல் உத்தரவை நிறைவேற்றலாம் என்று எண்ணி சாங்கி விமான நிலையத்தில் வந்திறங்கிய போது பொய்யான தகவல்களை அளித்ததாக நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார். அவர் ஒரு சிங்கப்பூர் நிரந்தரவாசி என்பது குறிப்பிடத்தக்கது. தைவான் நாட்டைச் சேர்ந்த அவர் மீது, தொற்றுநோய் சட்டத்தின் கீழ் மாவட்ட நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது.

48 வயது நிரம்பிய லு யி யின் என்ற அவர் தன்னை போலவே பயணத்தை மேற்கொண்டு தனிமைப்படுத்துதல் உத்தரவை வீட்டில் நிறைவேற்றி வரும் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தனியாக இருக்கப்போவதாக அந்த படிவத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார். இவ்வாறு தெரிந்த நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன, இதனால் கடந்த ஜூலை 14 முதல் 28 வரை வீட்டில் தனிமையில் இருக்கும்படி அவருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து அதற்கு அடுத்த நாள் சில அமலாக்க அதிகாரிகள் அந்த நபர் தங்கியிருந்த வீட்டிற்கு ரோந்து சென்ற பொழுது அங்கு ஏற்கனவே இருந்தவர்கள் அந்த ஆடவர் பயணக் குறிப்பில் குறிப்பிட்டிருந்தது போல பயணங்கள் எதையும் மேற்கொள்ளவில்லை என்பது தெரியவந்தது.

மேலும் அந்த ஆடவர் பயணம் மேற்கொண்ட நாடு அவர்களுடைய வீட்டினுடைய முகவரி மற்றும் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் பற்றிய தகவல்களை நீதிமன்றம் எதுவும் குறிப்பிடவில்லை. தற்போது அந்த நபருக்கு 5000 வெள்ளியில் பெயில் அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவருடைய வழக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

Related posts