TamilSaaga

“நல்வாழ்வு முதல் இறுதிச் சடங்கு வரை” : சிங்கப்பூரில் தனியாக வாழும் முதியோருக்கு உதவும் நிறுவனங்கள்

சிங்கப்பூரில் பழமையான மற்றும் மிகப்பெரிய இறுதிச் சடங்கு சேவைகளை செய்து வரும் நிறுவனங்களில் ஒன்றான சிங்கப்பூர் கேஸ்கெட், இந்த ஆண்டு தனியாக இருந்த நிலையில் இறந்த முதியோருக்கு, அவர்களின் இறுதிச் சடங்குகளில் உதவி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 2021ம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களுக்கு, இது போன்ற 36 இறுதிச் சடங்குகளை அந்த நிறுவனம் நடத்தியுள்ளது. இது கடந்த 2020ல் அவர்கள் கையாண்ட 47 வழக்குகளை விட அதிகமானதாகும்.

கடந்த சனிக்கிழமை, சிங்கப்பூரின் பெடோக் நார்த் அவென்யூ 2 பிளாட்டில், 74 வயதான ஒரு மூதாட்டி இறந்து ஒரு வாரத்திற்கும் மேலாக வீட்டில் கிடந்த நிலையில். துர்நாற்றம் வீசிய பிறகு அக்கம்பக்கத்து வீட்டில் உள்ளவர்களால் அறியப்பட்டு அதற்கு பிறகு அதிகாரிகள் வந்து அவரது உடலை கொண்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த டிசம்பரில், தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி நிறுவனம் தங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளில், 2020-ல் சுமார் 48 பேரின் உடல்களைக் குடும்பத்தினரிடம் அளிக்க போலீசார் அவர்களது இணையத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், அவர்கள் மருத்துவமனைகள், ஆதரவற்றோர் நல இல்லங்கள் மற்றும் சொந்த வீடுகளில் இறந்துள்ளனர்.

சிங்கப்பூர் கேஸ்கெட்டின் உதவி பொது மேலாளர் திரு. கால்வின் டாங், “முதியவர்கள் தனியாக இறக்கும் வழக்குகள் கணிக்க முடியாதவை” என்று கூறினார். ஒரு மாதம் ஒன்று முதல் இரண்டு வழக்குகள் வரும் நிலையில் மறுமாதம் எட்டு முதல் 10 வரை வழக்குகள் வருமென்று அவர் கூறினார். பொதுவாக மருத்துவமனைகள், சமூக சேவகர்கள், மத அமைப்புகள் மற்றும் மூத்த செயல்பாட்டு மையங்கள் வழியாக தங்களுக்கு இந்த இறப்பு குறித்த அழைப்பு வருவதாக திரு. டாங் கூறினார்.

இறந்தவர்களுக்கு நிதி சிக்கல்கள் இருந்தால் அவர்கள் இறுதிச் சடங்குகளை இலவசமாக செய்வதாகவும் டாங் கூறினார்.

Related posts