சிங்கப்பூரின் முதல் மேம்படுத்தப்பட்ட நார்த் ஈஸ்ட் லைன் (NEL) ரயில் இன்று, பிப்ரவரி 28 முதல் பயணிகள் சேவைக்கு வருகிறது. சிங்கப்பூரின் நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) இன்று பிப்ரவரி 28 அன்று வெளியிட்ட பேஸ்புக் பதிவின்படி, NEL ரயில் அதன் திட்டமிடப்பட்ட மிட்-லைஃப் மேம்படுத்தலை முடித்த 25 ரயில்களில் இது முதன்மையானது என்று கூறியுள்ளது.
இந்த மேம்படுத்தப்பட்ட NEL ரயிலில் ரயில் பேனல்கள், தரைத்தளம், கைப்பிடிகள் மற்றும் கிராப் கம்பங்கள் போன்ற பல அம்சங்கள் புதிதாக புதுப்பிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. SGTrains அளித்த தகவலின்படி, புதிய உட்புற பொருத்துதலின் ஒரு பகுதியாக பெர்ச் இருக்கைகளுடன் கூடிய அதிக நிற்கும் இடமும் தற்போது நிறுவப்பட்டுள்ளது. அதேபோல கூடுதலாக, ரயிலின் குளிரூட்டல் மற்றும் காற்றோட்ட அமைப்பும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
திரைகளில் ஸ்டேஷன்கள் மற்றும் கதவுகள் திறக்கும் பக்க அறிகுறிகளைப் பற்றிய டிஜிட்டல் தகவலை வழங்க, முந்தைய நிலையான பாதை-வரைபட ஸ்டிக்கர்களுக்குப் பதிலாக புதிய டைனமிக் ரூட் மேப் டிஸ்ப்ளேகளும் (DRMD) பொருத்தப்பட்டுள்ளன. இந்த மேம்படுத்தப்பட்ட ரயில் ரயில் சேவை நேரத்திற்குப் பிறகு NEL பாதையில் சோதனை செய்யப்பட்டது, ரயில் சமிக்ஞை அமைப்புகள் மற்றும் பிளாட்பார்ம் கதவுகளுடன் தொடர்பு கொள்ள ரயிலால் முடியும் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சிங்கப்பூரை பொறுத்தவரை முதல் தலைமுறை மெட்ரோபோலிஸ் C751A ரயில்கள், பிரெஞ்சு உற்பத்தியாளர் Alstom ஆல் தயாரிக்கப்பட்டது, NEL சேவையில் சுமார் 19 ஆண்டுகளாக கடந்த 2003 முதல் சேவை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.