TamilSaaga

சிங்கப்பூரில் ஜுலை 1 முதல் அமலாகும் தடை – வெளிநாட்டவர்கள் மற்றும் சிங்கப்பூரர்கள் கவனத்திற்கு!

சிங்கப்பூரின் புகை பிடிப்பதற்கான தடை ஜூலை 1 முதல் நீட்டிக்கப்படுகிறது. அனைத்து பொதுப் பூங்காக்கள் மற்றும் கார்டன்கள், 10 பொழுதுபோக்கு கடற்கரைகள் மற்றும் PUB மூலம் நிர்வகிக்கப்படும் பல பகுதிகளில் இந்த தடை நீட்டிக்கப்படுகிறது.

இன்று (மார்ச் 7) தனது அமைச்சகத்தின் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது, நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் மூத்த அமைச்சர் Amy Khor இதை அறிவித்தார்.

பயன்படுத்தப்படும் புகையின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளிலிருந்து சிங்கப்பூரைப் பாதுகாக்க இந்தத் தடை நீட்டிக்கப்பட்டது என்று அமைச்சர் கோர் கூறினார்.

தற்போது, சிங்கப்பூரின் புகைபிடித்தல் தடையானது தனியார் மற்றும் பொது மக்களின் வீட்டுத் தோட்டங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் பூங்காக்கள் போன்ற இடங்களில் அமலில் உள்ளது.

நடைபாதைகள், பேருந்து நிறுத்தத்திலிருந்து 5 மீ தொலைவில் உள்ள பகுதிகள் ஆகியவற்றிலும் புகைபிடித்தல் அனுமதிக்கப்படாது.

மேலும் படிக்க – ஷூட்டிங்கில் அப்படியே தலைகுப்புற விழுந்த நடிகை.. முகத்தில் விழுந்த 6 கிலோ எடையுள்ள பந்து – அதிதீவிர சிகிச்சை!

அமைச்சரின் இன்றைய புதிய அறிவிப்பின் மூலம், தேசிய பூங்கா வாரியத்தால் (NParks) நிர்வகிக்கப்படும் மற்ற பொதுப் பூங்காக்கள் மற்றும் தோட்டங்கள் மற்றும் PUB இன் செயலில் உள்ள, அழகான, சுத்தமான நீர் தேக்க இடங்களில் ஜூலை முதல் புகைபிடிப்பது தடைசெய்யப்படும்.

எடுத்துக்காட்டுக்கு சொல்ல வேண்டுமெனில், லோரோங் ஹாலஸ் பாலம் (Lorong Halus Bridge) போன்ற இடங்களை சொல்லலாம். Sengkang Floating Wetland போன்ற சதுப்பு நிலங்கள் மற்றும் பெரிய வடிகால்களுக்கு அருகிலுள்ள பகுதிகளும் இந்தத் தடையில் அடங்கும்.

அதுமட்டுமின்றி, 10 கடற்கரைகளில் புகைபிடிப்பதற்கும் தடை விதிக்கப்படுகிறது

சாங்கி பீச், ஈஸ்ட் கோஸ்ட் பீச், வெஸ்ட் கோஸ்ட் பீச், செம்பவாங் பீச், பாசிர் ரிஸ் பீச் மற்றும் புங்கோல் பீச் மற்றும் கோனே தீவில் (Coney Island.) உள்ள கடற்கரையும் அடங்கும்.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் ஒட்டுமொத்த இளைஞர்களையும் வெட்கப்பட வைத்துள்ள 75 வயது பாட்டி!

சிலோசோ கடற்கரை, தஞ்சோங் கடற்கரை மற்றும் சென்டோசாவில் உள்ள பலவான் கடற்கரை ஆகியவற்றிலும் புகைபிடிக்க அனுமதிக்கப்படாது.

ஜூலை 1 ஆம் தேதி தடை அமலுக்கு வரும்போது, புகைப்பிடிப்பவர்கள் பெரும்பாலும் புகைபிடிக்கும் இடங்கள் மற்றும் திறந்த பொது இடங்களான காலி நிலம், மூடப்படாத நடைபாதைகள் மற்றும் multi-storey கார்பார்க்குகளின் மேல் தளத்தில் உள்ள மூடப்படாத பகுதிகள் போன்றவற்றில் மட்டுமே புகைக்க முடியும். மேலும் தங்கள் வீடுகள் மற்றும் கார்களில் புகைக்க முடியும். அதுவும், அந்த புகை வெளியே வந்து மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுக்காத படி புகைக்க வேண்டும்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts