TamilSaaga

வெறும் முப்பதே நிமிடம்… வெள்ள நீர் முழுவதும் வடிந்த அற்புதம்… இதுதான் உலகமே வியக்கும் சிங்கப்பூரின் “தனித்துவம்”

சிங்கப்பூரில் கனமழை காரணமாக, நேற்று (மார்ச் 7) பிற்பகல் 3.45 மணியளவில் பழைய சுவா சூ காங் சாலையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் லாரி ஒன்றின் பாதி பகுதி மூழ்கியது. இதில் அந்த லாரியின் டிரைவர் சிக்கிக்கொண்டார்.

இதையடுத்து, சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த (SCDF) பணியாளர்கள் 1.5 மீட்டர் ஆழமான தண்ணீருக்குள் நுழைந்து அந்த ஓட்டுநரை பாதுகாப்பாக மீட்டனர்.

முன்னதாக, திங்கட்கிழமை பிற்பகலில் பெய்த கனமழையால் ஜூரோங் ஈஸ்ட் ஸ்ட்ரீட் 32 மற்றும் பூன் லே வே அருகே உள்ள எண்டர்பிரைஸ் சாலையில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் ஜுலை 1 முதல் அமலாகும் தடை – வெளிநாட்டவர்கள் மற்றும் சிங்கப்பூரர்கள் கவனத்திற்கு!

தேசிய நீர் நிறுவனமான PUB அதிகாரிகள் வாகன ஓட்டிகளுக்கு உதவி செய்து, சாலைகளை மூடும் போது போக்குவரத்தையும் ஒழுங்குபடுத்தினர்.

ஜூரோங் ஈஸ்ட் மற்றும் எண்டர்பிரைஸ் சாலையில் ஏற்பட்ட வெள்ளம் 30 நிமிடங்களில் வடிந்தது. இதுதான் சிங்கப்பூர்! இங்கு வடிகால்கள் அவ்வளவு சிறப்பாக இயங்குகின்றன. வடிகால்கள் உலகத்தரத்தில் அமைக்கப்பட்டுள்ளன. மழை நீர் எங்கும் தேங்காதபடி அவை அமைக்கப்பட்டுள்ளன. அரசின் திட்டமிடலும், அதிகாரிகளின் செயலாக்கமுமே இதற்கு முக்கிய காரணம். இதனால் தான், சுத்தமான நாடுகளின் டாப் பட்டியலிலும் சிங்கப்பூரால் இடம்பிடிக்க முடிகிறது.

மேற்கு சிங்கப்பூரில் மதியம் 2.35 மணி முதல் 4.45 மணி வரை ஜூரோங் வெஸ்ட் ஸ்ட்ரீட் 42 இல் 134.2 மிமீ மழை பதிவாகியுள்ளது என்று PUB மேலும் கூறியது.

மேலும் படிக்க – சிங்கப்பூர் வரும் கட்டுமானம் மற்றும் கடல் துறை Work Permit தொழிலாளர்கள் – மார்ச் 16 முதல் எளிமையாகும் நுழைவு நடைமுறை

பிற்பகல் 3.25 மணிக்கு சோவா சூ காங் அவென்யூ 1 மற்றும் டெக் வை லேனுக்கும், மாலை 3.30 மணிக்கு உட்லண்ட்ஸ் சாலை மற்றும் கிராஞ்சி எக்ஸ்பிரஸ்வேக்கும் PUB வெள்ள அபாய எச்சரிக்கைகளை வழங்கியது.

பூன் லே வே மற்றும் அருகிலுள்ள ஜாலான் பூன் லே, இன்டர்நேஷனல் ரோடு, சின் பீ ரோடு மற்றும் சுங்கேய் லஞ்சார் போன்ற பகுதிகளில் வடிகால்களில் நீர் மட்டம் 90 சதவீதமாக உயர்ந்தது, மேலும் பொதுமக்கள் இந்த பகுதிகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts