TamilSaaga

புலம்பெயர் தொழிலாளர்களை எப்போதும் கைவிடாத சிங்கை : அடுத்த மாதம் துவங்கும் Dormitory மற்றும் பணியிடம் குறித்த புதிய ஆய்வு!

சிங்கப்பூரில் அடுத்த மாதம் முதல் கட்டுமானத் தொழிலாளர்கள் தங்கள் பணியிடங்கள் மற்றும் தங்குமிடங்களில் வெப்ப அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும் ஒரு புதிய ஆய்வை இங்குள்ள விஞ்ஞானிகள் தொடங்கவுள்ளனர். இந்த புதிய ஆய்வுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 40 ஊழியர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் முக்கிய வெப்பநிலை மற்றும் வெப்ப தேவைகள் அவர்கள் வேலை செய்யும் போது கண்காணிக்கப்படும், இது தொழிலாளர்களின் வெப்ப அழுத்தத்தை குறைக்க மற்றும் தடுக்க விஞ்ஞானிகளின் ஆய்வினை அளிக்க வழிவகுக்கும்.

சிங்கப்பூரில் தாங்க முடியாத வலியில் துடிக்கும் தமிழ்நாட்டு தொழிலாளி… மூலையில் முடக்கிய ‘மூல வியாதி’ – பணம் திரட்ட திண்டாடும் குடும்பம்

காலநிலை மாற்றம் எதிர்காலத்தில் அதிக வெப்பநிலை மற்றும் அதிக வெப்ப அலைகளை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுவதால் இது மிகவும் தேவைப்படும் ஆய்வு என்று அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு 2020ல் தொடங்கப்பட்ட Project “Heat Safe”ன் ஒரு பகுதியாகும். இது தென்கிழக்கு ஆசியாவில் உள்ள மக்களின் ஆரோக்கியம் மற்றும் வேலை உற்பத்தித்திறனை, உயரும் வெப்பநிலை எவ்வாறு பாதிக்கிறது என்பதைக் கண்டறியும். இந்த ஆராய்ச்சி திட்டம் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் (NUS) அமைந்துள்ளது.

அதிகரித்து வரும் வெப்பநிலை ஆசியா முழுவதும் வெப்ப அலைகளின் அச்சுறுத்தலை அதிகரித்து வருகிறது, மேலும் இந்த நூற்றாண்டின் இறுதியில் ஆசியா பிராந்தியத்தில் உள்ள நாடுகள் கடுமையான வறட்சி நிலைமைகளால் பாதிக்கப்படும் என்று ஐக்கிய நாடுகளின் காலநிலை அறிவியல் அமைப்பு கடந்த மாதம் ஒரு புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கால நிலை மாற்றத்தால் முதலில் பாதிக்கப்படுவது பொதுவெளியில் வேலை செய்பவர்கள், குறைத்த காற்றோட்ட வசதி கொண்ட இடங்களில் வசிப்பவர்கள் அல்லது வேலை செய்பவர்கள் தான் என்று சிங்கப்பூர் NUSன் Yong Loo Lin School of Medicine (NUS Medicine) இணைப் பேராசிரியர் ஜேசன் லீ தெரிவித்துள்ளார்.

மார்ச் 27 முதல் சர்வதேச விமான சேவைகளுக்கு அனுமதி.. சிங்கப்பூரில் இருந்து இனி ஈஸியா இந்தியா போகலாம் – ஆனா டிக்கெட் கேன்சல் செய்தால் Refund கிடைக்குமா?

வெப்பத்தால் ஏற்படும் மரணம் மற்றும் Heat Stroke ஆகியவை நன்கு அறியப்பட்ட ஆபத்துகளாக இருந்தாலும், வெப்ப தாக்கத்தால் தொழிலாளர்கள் பல விதங்களில் பாதிக்கப்படக்கூடும் என்றும் அவர் கூறினார். ஆகையால் நமது புலம்பெயர் தொழிலாளர்களை வெப்பத்தில் இருந்து பாதுகாக்க நிச்சயம் இதுபோன்ற ஆய்வுகள் அவசியம் என்றும் அவர் கூறினார்.

Related posts