TamilSaaga

“உங்கள் மன உறுதியால் சிங்கப்பூரர்களை ஊக்குவித்துள்ளீர்கள்” – சிங்கப்பூர் பாராலிம்பிக் அணியை பாராட்டிய பிரதமர்

கடந்த மாதம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொடங்கிய பாராலிம்பிக் போட்டிகள் 2020 இன்றோடு (செப்டம்பர் 5) முடிவுக்கு வருகின்றது. இந்நிலையில் சிங்கப்பூர் சார்பாக பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தனது முகநூல் பதிவின் மூலம் தெரிவித்துள்ளார் சிங்கப்பூர் பிரதமர் லீ.

அவர் வெளியிட்ட முகநூல் பதிவில் “டோக்கியோ 2020 பாராலிம்பிக் போட்டிகள் இன்று மாலை முடிவடையும், 10 பேர் கொண்ட அணி சிங்கப்பூர் சார்பாக பங்கேற்றனர். அதில் நான்கு பேர் தங்களுடைய முதல் பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது”. “அனைவரும் பாராட்டத்தக்க வகையில் தங்கள் பங்கை அளித்துள்ளனர். ஸ்டீவ் டீ மற்றும் அவரது பாரா சைக்கிளிங் கூட்டாளி ஆங் கீ மெங் இரண்டு தனிப்பட்ட சாதனைகளை படைத்துள்ளார்”.

“டோ வெய் சூங் இரண்டு போட்டிகளில் தனிப்பட்ட சிறந்த மற்றும் தேசிய சாதனைகளைப் படைத்துள்ளார் மேலும் முஹ்த் டிராய் தனது சொந்த தேசிய சாதனையை முறியடித்தார் மற்றும் ஆண்கள் ஷாட் புட் F40 போட்டியில் தனிப்பட்ட சிறந்த சாதனையைப் படைத்துள்ளார். யிப் பின் சியு தனது இரண்டு நிகழ்வுகளிலும் தனது தங்கப் பதக்கங்களை வெற்றிகரமாகப் தக்கவைத்துள்ளார்.”

“குறிப்பாக இந்த கடினமான காலங்களில், சிங்கப்பூரர்களை உங்களின் உற்சாகம், ஆர்வம் மற்றும் ஒருபோதும் விட்டுக்கொடுக்காத மனப்பான்மையுடன் ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றி” இந்த அனுபவம் நம் அனைவரையும் சிறப்பாகவும் வலுவாகவும் ஊக்குவிக்கட்டும்” என்று அந்த பதிவில் கூறினார்.

Related posts