TamilSaaga

சிங்கப்பூரில் 2 ஆண்டுகளுக்கு பிறகு தமிழருக்கு நடந்த கொடூர விபத்து – எத்தனை கோடி கொடுத்தாலும் போன உயிர் திரும்ப வராது!

சிங்கப்பூரில் இந்த 2022ம் ஆண்டில் மட்டும் இதுவரை 16 பேர் பணியிடங்களில் ஏற்பட்ட விபத்து காரணமாக இறந்துள்ளனர். அதிலும் இந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 7 பேர் இறந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு சிங்கப்பூரில் நோவெனாவில் உள்ள கட்டுமான தளத்தில் கிரேன் சரிந்து விழுந்ததில் ஒரு தமிழக தொழிலாளி உயிரிழந்தார். நவம்பர் 5 2019ம் ஆண்டு ஜாலான் டான் டோக் செங்கில் உள்ள புதிய கட்டுமான தளத்தில் பணியில் இருந்தபோது கிரேன் சரிந்து விழுந்ததில் திரு. வேல்முருகன் முத்தியன், 28, சம்பவ இடத்திலேயே இறந்ததாக அறிவிக்கப்பட்டது.

செவ்வாய்க்கிழமை அவர் இறந்த நிலையில் சிங்கப்பூரில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவி செய்யும் ItsRainingRaincoat நிறுவனர் திருமதி. தீபா சுவாமிநாதன் கூறுகையில், திரு. வேல்முருகனின் உடல் வியாழன் அதிகாலை இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்டது என்றார்.

அந்த சம்பவத்திற்கு பிறகு கடந்த 2021ம் ஆண்டு PIE பகுதியில் ஏற்பட்ட விபத்தில் லாரியில் பயணம் செய்த கேரளா தொழிலாளி உயிரிழந்த சம்பவமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு சுமார் இரண்டு ஆண்டுகள் கழித்து ஒரு தமிழக தொழிலாளி நேற்று சிங்கப்பூரில் இறந்துள்ளார்.

சிங்கப்பூரின் Yishun பகுதியில், நேற்று (ஏப்.27) காலை 8:09 மணியளவில் தமிழக தொழிலாளி சண்முகம் ஜோதி (வயது 39) என்பவர் Prime Mover வாகனத்தை இயக்கியுள்ளார். இந்த Prime Mover என்பது கனரக வாகனமாகும். அதிக எடை கொண்ட வண்டி இது.

எல்லைகள் திறந்தாச்சு.. கட்டுப்பாடுகளும் இல்லை.. மீண்டும் சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு அதிகரிக்குமா? – அமைச்சர் Tan See Leng விளக்கம்

இந்நிலையில், நேற்று காலை சரக்குகளை ஏற்றுவதற்காக Prime Mover வாகனத்தை ஓட்டிச் சென்ற சண்முகம், அதனை 15 Yishun தொழிற்சாலை Street 1 அருகே உள்ள block அருகே நிறுத்தியிருக்கிறார். வாகனத்தை நிறுத்தும் போதே அதனை ஒரு சாய்வான பகுதியில் தான் பார்க் செய்திருக்கிறார்.

இங்கு அவர் செய்த மிகப்பெரும் தவறு, Parking Brake பயன்படுத்தாமல் விட்டது தான். ஏதோ ஒரு நியாபகத்தில் Parking Brake பயன்படுத்தாமல் கீழே இறங்கிய சண்முகம், அந்த இடத்தை விட்டு நகர முயற்சி செய்த போதுதான், தான் செய்த தவறு அவருக்கு நினைவுக்கு வந்துள்ளது.

சிங்கப்பூர் Orchard Towers.. குடிபோதையில் சுற்றித்திரிந்த “வெளிநாட்டு மங்கை” – பெண் போலீஸ் அதிகாரியை வசைபாடினால் சும்மா விடுவார்களா?

Parking Brake யூஸ் பண்ணவில்லையே என்று அவர் நினைக்கும் நொடி, Slope பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனம், அப்படியே சரிந்து கீழே வர, சண்முகத்தின் இடித்து தள்ளி அவர் மேல் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே சண்முகம் உயிரிழந்தார்.

பல்லாயிரம் கிலோமீட்டர் தொலைவில் வந்து குடும்பத்திற்காக பாடுபட்டு உழைக்கும் நமது புலம்பெயர் தொழிலாளர்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் என்று மீண்டும் நினைவுபடுத்தி சென்றுள்ள சண்முகம் என்று தான் கூறவேண்டும்.

இழப்பீடாக எத்தனை கோடி கொடுத்தாலும் போன உயிர் திரும்பி வராது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts