TamilSaaga

சிங்கப்பூர் Orchard Towers.. குடிபோதையில் சுற்றித்திரிந்த “வெளிநாட்டு மங்கை” – பெண் போலீஸ் அதிகாரியை வசைபாடினால் சும்மா விடுவார்களா?

கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் நள்ளிரவுக்குப் பிறகு ஆர்ச்சர்ட் டவர்ஸுக்கு வெளியே குடிபோதையில் காணப்பட்டதை அடுத்து கைது செய்யப்பட்ட ஒரு ரஷ்ய பெண், லாக்-அப்பில் இருந்த ஒரு பெண் போலீஸ் அதிகாரியை நோக்கி அநாகரீகமான வார்த்தைகளை கொண்டு பேசியுள்ளார்.

25 வயதான டாரியா செவோஸ்டியானோவா என்ற அவர், நேற்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 26) தன் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை ஒப்புக்கொண்டதால், அவருக்கு $1,600 அபராதம் விதிக்கப்பட்டது. ஒரு போலீஸ் அதிகாரி மீது கிரிமினல் குற்றத்தை பிரயோகித்தது உட்பட மற்ற இரண்டு குற்றச்சாட்டுகள் தண்டனையின் போது பரிசீலிக்கப்பட்டன.

கடந்த ஆண்டு மே 15ம் தேதி இரவு 11 மணியளவில், ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள வணிக வளாகத்தின் முதல் மாடியில் உள்ள கழிவறையில் இரண்டு பெண்கள் சண்டையிடுவது குறித்து காவல்துறைக்கு அழைப்பு வந்தது குறிப்பிடத்தக்கது.

செவோஸ்டியானோவா அந்த இரு பெண்களில் ஒருவரா என்பது நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை. ஆனால் நீதிமன்ற ஆவணங்களின்படி, அவர் அன்று இரவு 12.02 மணியளவில் ஆர்ச்சர்ட் டவர்ஸுக்கு வெளியே குடிபோதையில் காணப்பட்டுள்ளார்.

சிங்கப்பூரில் கண்ணிமைக்கும் நேரத்தில் நசுங்கிய தமிழக ஊழியரின் உடல்… அங்கேயே பிரிந்த உயிர் – 7 ஆண்டு உழைப்பு ஒரு நொடியில் நாசம்!

பொதுமக்களுக்கு இடையூறாக இருந்ததற்காக செவோஸ்டியானோவா கைது செய்யப்பட்டு, போலீஸ் கன்டோன்மென்ட் வளாகத்தில் அடைக்கப்பட்டார்.

துணை அரசு வக்கீல் கோ யி வென் கூறுகையில், கைதான ரஷ்ய பெண் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, ​​அருகில் இருந்த ஒரு பெண் போலீஸ் அதிகாரியை நோக்கி அநாகரீகமான வார்த்தைகளை பேசியுள்ளார்.

மேலும் செவோஸ்டியானோவா, ரத்தக்கறை படிந்த ஒரு டிஸ்யூ பேப்பரை அந்த அதிகாரி மீது வீசியுள்ளார். செவ்வாயன்று அந்த ரஷ்யா பெண்ணுக்கு $2,000 முதல் $3,000 வரை அபராதம் விதிக்குமாறு நீதிமன்றத்தை வலியுறுத்தி, DPP கோ கேட்டுக்கொண்டார்.

இறுதியில் அவருக்கு 1600 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts