TamilSaaga

“சிங்கப்பூர் PR-கள் மற்றும் சர்வதேச மாணவர்களுக்கு பள்ளி கட்டணத்தில் மாற்றம்” – எவ்வளவு உயர்ந்துள்ளது?

சிங்கப்பூரில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் சர்வதேச மாணவர்களுக்கான பள்ளிக் கட்டணம் 2022 மற்றும் 2023ம் ஆண்டில் அதிகரிக்கும் என்று கல்வி அமைச்சகம் (MOE) வியாழக்கிழமை (அக்டோபர் 21) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் அத்தகைய பள்ளிகளில் பயிலும் சிங்கப்பூர் மாணவர்களுக்கான பள்ளி கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இருக்காது என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் “இது MOE- ன் பள்ளி கட்டணத்தின் வழக்கமான மதிப்பாய்வின் ஒரு பகுதியாகும். அடுத்த இரண்டு ஆண்டுகளில் குடிமக்கள் அல்லாதோருக்கான திட்டமிட்ட கட்டண உயர்வை வெளியிடுவது MOE பள்ளிகளில் தங்கள் குழந்தைகளின் படிப்புக்கான நிதியுதவிக்கு பெற்றோர்களைத் திட்டமிட உதவும்” என்று கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. நிரந்தர குடியிருப்பாளர்களுக்கு மாதாந்திர பள்ளி கட்டணம் 25 வெள்ளி முதல் 60 வெள்ளி மற்றும் சர்வதேச மாணவர்களுக்கு 25 வெள்ளி முதல் 150 வெள்ளி வரை ஒவ்வொரு ஆண்டும் 2022 மற்றும் 2023-க்கு அதிகரிக்கும். திருத்தப்பட்ட கட்டணங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் அமலுக்கு வரும்.

சிங்கப்பூர் மாணவர்கள் தொடக்கப்பள்ளிக்கு மாதாந்திர பள்ளி கட்டணத்தை செலுத்த தேவையில்லை மற்றும் இடைநிலை பள்ளி மற்றும் முன் பல்கலைக்கழகத்திற்கு முறையே 5 வெள்ளி மற்றும் 6 வெள்ளி செலுத்த வேண்டும்.

மேலும் நிலையான இதர கட்டணங்களும் மாற்றமில்லாமல் இருக்கும். இரண்டாம் நிலை இதர கட்டணங்கள் பள்ளிகளால் நிர்ணயிக்கப்படுகின்றன மற்றும் தரமான இதர கட்டணங்களில் கட்டுப்படுத்தப்படுகின்றன. அனைத்து தேசிய மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான கட்டணங்கள் பொருந்தும்.

Related posts