TamilSaaga

பயணிகளிடம் தமிழில் கலந்துரையாடிய விமான கேப்டன்!!வைரலாகும் வீடியோ!!

விமான கேப்டன் பயணிகளிடம் தமிழிழ் நலம் விசாரித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

குவைத்தில் இருந்து சென்னைக்கு இயங்கிய விமானத்தின் கேப்டனான தமிழகத்தைச் சேர்ந்த பிரிய விக்னேஷ்  விமானம் புறப்படுவதற்கு முன்னர் தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளிடம் மைக்கில் உரையாடினார் .ஒவ்வொருவரும் எத்தனை வருடம் கழித்து சென்னை செல்கின்றனர் என அவரின் வீடியோ பலரை கவர்ந்துள்ளது.

அன்பார்ந்த பயணிகளே தற்போது நாம் கடல் மட்டத்திலிருந்து 16,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறோம்.

நம் வான்வெளி பாதையானது தற்போது காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருச்சி மாநகர் மீது சென்று கொண்டிருக்கிறது மதுரை மாநகர் நோக்கி என அழகாக புரியும்படி தமிழில் அறிவிப்பு செய்தார் கேப்டன் .

நம் வான்வெளி பாதையானது தற்போது காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருச்சி மாநகர் மீது சென்று கொண்டிருக்கிறது மதுரை மாநகர் நோக்கி என அழகாக புரியும்படி தமிழில் அறிவிப்பு செய்தார் கேப்டன் .இதோ இதுதான் காவேரி கொள்ளிடம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோயில் என்று விமானத்தில் தமிழில் வர்ணனை வழங்கிய சென்னையை சேர்ந்த பைலேட் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி உள்ளார் தமிழில் அடையாளம் காட்டும் வீடியோ பலரால் பயிரப்பட்டு வருகிறது.

தனது உயர் அதிகாரி கேப்டன் சஞ்சீவ் விமானத்தை இயக்கும்போது முக்கிய இடங்களை அடையாளம் காட்டிக்கொண்டே வருவார் என்றும் அந்த தூண்டுதலே தமிழில் வர்ணனை தர வழிவகுத்ததாகவும் பிரிய விக்னேஷ் குறிப்பிட்டுள்ளார்

தமிழில் நம்பிக்கையுடன் பேசும் திறமைக்கு காரணம் அரசு பள்ளி ஆசிரியரான தனது தாய் தவமணி என்றும் அவர் தெரிவித்துள்ளார்

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை உள்ளதை உள்ளபடி தெரிந்து கொள்ள தமிழ் சாகா ஃபேஸ்புக் பக்கத்தை நீங்க ஃபாலோ பண்ணலாம்.

Related posts