TamilSaaga

கொரோனா தடுப்பு விதிமுறை மீறல் – கோமள விலாஸ் KFC கிளை உள்ளிட்ட 16 கடைகள் மூடல்

சிங்கப்பூரில் தற்போது அமலில் உள்ள பெருந்தொற்று தடுப்பு விதிமுறைகளை மீறியதாக பிரபல கோமள விலாஸ், கேஎஃப்சி கிளைகள் உள்பட 16 உணவு மற்றும் பானக்கடைகளை மூட தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக கூறி கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 13 முதல் 14 தனிநபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து, வரும் காலங்களில் கடுமையான சட்டங்கள் அமலுக்கு வரும் என்று சிங்கப்பூர் அரசு குறிப்பிட்டுள்ளது.

ஒரு மீட்டர் இடைவெளி கடைபிடிக்காமல் இருந்தது, வாடிக்கையாளர்களுக்காக அதிக சத்தத்தோடு இசையை வைத்தது போன்ற குற்றங்களுக்காக பத்து இடங்களுக்கு சுமார் 1000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிராங்கூன் ரோட்டில் உள்ள கோமள விலாஸ் இரண்டாவது முறையாக கிருமித்தொற்று விதிமுறைகளை மீறியதற்காக பத்து நாட்கள் மூடப்படுகின்றது. கடைக்குள் வாடிக்கையாளர்கள் வரிசையில் நிற்கும்போது ஒரு மீட்டர் இடைவெளியை உறுதிசெய்ய தவறியதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோமள விலாஸ் வரும் 8ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும்

Related posts