TamilSaaga

Sentosa என்னும் சிறு தீவுக்குள் உறங்கி கொண்டிருக்கும் ரகசியங்கள்: இதை படித்தால் Sentosa – வை இனி வேறுகோணத்தில் பார்ப்பீங்க!

Sentosa என்பது சிங்கப்பூரின் தெற்கு கடற்கரையில் அமைந்துள்ள அழகான தீவு என்று சொல்வதைக் காட்டிலும் சொர்கத்தின் ஒரு பகுதி என்றும் கூறலாம். அதன் அழகிய கடற்கரைகள் மற்றும் அற்புதமான இயற்கை கொஞ்சும் இடங்கள் நிச்சயம் காண்போரை மயக்குபவை.

தற்போது Sentosa எனப்படும் இத்தீவு, முன்பு Pulau Blakang Mati என்ற பெயராலே அழைக்கப்பட்டது.மேலும் இந்த தீவானது சிங்கப்பூரின் நகரிலிருந்து Keppel Harbour என்ற நீர்வழியால் பிரிக்கப்பட்டு, மற்றொரு சிறிய தீவான Pulau Brani க்கு அருகில் உள்ளது.

முன்னர் பிரிட்டிஷ் இராணுவத் தளமாகவும், பின்னர் ஜப்பானிய போர்க் கைதிகளின் முகாமாகவும் பயன்படுத்தப்பட்ட இத்தீவு Sentosa என மறுபெயரிடப்பட்டு, தற்போது ஒரு பிரபலமான சுற்றுலா தலமாக விளங்குகிறது. மேலும் இது வருடத்திற்கு இருபது மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெறும் பிரபலமான ரிசார்ட் தாயகமாக உள்ளது.

Sentosa பெயர்க்காரணம்

Sentosa என்ற பெயருக்கு மலாய் மொழியில் அமைதி மற்றும் நிம்மதி என்று பொருள். இது மனநிறைவு, திருப்தி எனப் பொருள் படும் Sanskrit வார்த்தையான Santosha என்பதிலிருந்து பெறப்பட்டு, தற்போது Sentosa என்று வழங்கப்படுகிறது.இதன் முந்தைய பெயரான Pulau Blakang Mati க்கு மலாய் மொழியில் Island of Death Behind”.அதாவது மரணத்திற்கு பின்னால் இருக்கும் தீவு என்று பொருள்.

Sentosa முன்பு “Island of Death Behind” மரணத்திற்கு பின்னால் இருக்கும் தீவு என்று அழைக்கப்பட காரணம் என்ன?

இத்தனை அழகும் சிறப்பும் வாய்ந்த தீவிற்கு சற்றும் பொருத்தமற்ற மரணத்திற்கு பின்னால் இருக்கும் தீவு என்று பெயரிட பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது.

முதலாவதாக, முன்பு ஒரு காலத்தில் இத்தீவு கொலை,கொள்ளைகளில் சிக்கியிருக்கலாம் எனவும்,
இரண்டாவதாக இத்தீவின் அருகே Pulau Brani தீவில் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் போர்வீரர்களின் ஆவிகளுக்கான சொர்க்கத்தீவு என்ற பொருளில் இப்பெயர் வழங்கி இருக்கலாம் எனவும், மூன்றாவதாக 1840 களின் பிற்பகுதியில் இத்தீவில் பரவிய கொடிய தொற்று நோய்க் காரணமாக மக்கள் பலர் இறந்ததால் இப்பெயர் வந்திருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.

பின்னர் 1898 இல் தான் இந்நோய் மலேரியா என்று கண்டறியப்பட்டது. மேலும் Dead back island என்று பெயர்வர, மலைகளில் வளமான மண் இல்லாததால் இவ்வாறு அழைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இறுதியாக 1972 ஆம் ஆண்டு சிங்கப்பூர் சுற்றுலா மேம்பாட்டு வாரியத்தால் (STB) ஏற்பாடு செய்யப்பட்ட போட்டியில், இத்தீவு Sentosa எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு தற்போது இப்பெயரைக் கொண்டு அழைக்கப்படுகிறது.

Sentosa வரலாறு

காலனித்துவ காலத்தில் இத்தீவு British இராணுவ தளமாக செயல்பட்டது. துறைமுகத்தின் கிழக்கு மற்றும் மேற்கு நுழைவாயில்களைப் பாதுகாக்க, Serapong, Connaught மற்றும், Silosa அத்துடன் Mount Imbiah Battery ஆகிய கோட்டைகள் 1870 கள் மற்றும்1880 களில் நிறுவப்பட்டன.

பின்னர் 1942 இல் இரண்டாம் உலக போரின் போது ஜப்பானிய போர்க் கைதிகளின் முகாமாக இருந்தது.
போருக்குப் பிறகு, ஜப்பான் சரணடைந்ததைத் தொடர்ந்து பல்வேறு பிரிட்டிஷ் இராணுவப் பிரிவுகளும், கூர்க்காக்களும், பிளகாங் மாட்டியை மீண்டும் ஆக்கிரமித்தனர்.

பின்பு சிறிது சிறிதாக கடைகள் மற்றும் சேவைகள் வடிவில் தீவில் பொருளாதார நடவடிக்கைகள் அதிகரித்ததோடு, பொதுமக்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. மேலும் பள்ளிகள் மற்றும் மத நிறுவனங்களும் உருவாகின.

ஜனவரி 1969 இல், சிங்கப்பூர் சுற்றுலா மேம்பாட்டு வாரியத்தின் தலைவர், P. H. மெடோஸ், இத்தீவை சிறந்த சுற்றுலா தலமாக்கும் எண்ணத்தை முதன்முதலாக முன்வைத்து sentosa உருவாக அடித்தளம் அமைத்தார்
பின்னர் 1972 ஆம் ஆண்டு சிங்கப்பூர் சுற்றுலா மேம்பாட்டு வாரியத்தால் (STB) ஏற்பாடு செய்யப்பட்ட போட்டியில், இத்தீவு Sentosa எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, அதே ஆண்டில் 124 மில்லியன் டாலர் மதிப்புள்ள அரசுப் பணம் மற்றும் தனியார் துறை முதலீடுகள் ரிசார்ட்டின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்டன.

பின்பு பார்வையாளர்களை ஈர்ப்பதற்காக சிங்கப்பூரின் பிரதான நிலப்பகுதியிலிருந்து (மவுண்ட் ஃபேபர் வழியாக) சென்டோசாவிற்கு 1974 ஆம் ஆண்டு ஒரு கேபிள் கார் அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இது நல்ல வரவேற்பைப் பெற்று கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு 50,000 பயணிகள் மாதந்தோறும் இதை பயன்படுத்தி தீவிற்கு வரத்துவங்கினர்.

தீவிற்கு பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைத் தொடர்ந்து உடனடியாக Sentosa Golf Club, Sentosa Coralarium, the Palawan Beach Lagoon, a musical fountain, fort Siloso, Surrender chamber wax museum மற்றும் butterfly Park போன்ற கேளிக்கை பொழுதுபோக்கு தளங்கள் உருவாக்கப்பட்டன. தொடர்ந்து 1982 இல் Sentosa Monorail system ம் திறக்கப்பட்டது.

கடந்த 2018 ம் ஆண்டு Sentosa தீவின் கேபெல்லா ஹோட்டலில் அமெரிக்க அதிபர் டொனால்ட்டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர்  கிம் ஜாங்-உன் இடையே 2018 வடகொரியா-அமெரிக்க உச்சிமாநாட்டு சந்திப்பு நடந்தது இத்தீவை மேலும் உலகறியச் செய்தது.

Sentosa சிறப்புகள்

இத்தீவின் பரப்பளவு 5 ச.கிமீ ஆகும்.

இது சிங்கப்பூரின் நான்காவது பெரிய தீவு ஆகும்.

தீவின் 70% இரண்டாம் நிலை மழைக்காடுகளால் சூழப்பட்டு, மானிட்டர் பல்லிகள், குரங்குகள், 
மயில்கள், கிளிகள் மற்றும் பிற பூர்வீக விலங்கினங்கள் மற்றும் தாவரங்களின் வாழ்விடமாக உள்ளது.

இத்தீவில் 3.2 கிமீ (2.0 மைல் ) வெள்ளை மணல் கடற்கரை உள்ளது.

இங்கு 19 Resort hotels உள்ளன.

Palawan Beach, Siloso Beach and Tanjong Beach என மூன்று கடற்கரைகள் கொண்டுள்ளது.

Sentosa Attractions

Sentosa எப்படி செல்லலாம்?

1.Universal Studios
2.SEA Aquarium
3.Adventure Cove Waterpark
4.Sentosa 4D AdventureLand
5.Dolphin Discovery
6.Faber Peak Singapore Cable Car
7.Bungy Jump
8.HydroDash
9.iFly
10.SkyHelix Sentosa
11.Scentopia
12.Madame Tussauds Singapore
13.Trickeye @ Southside
14.Mega Adventure Park
15.Wings of Time Show Ticket in Singapore
16.HeadRock VR Ticket in Sentosa
17.Singapore’s City Lights & Sunset Dinner Cruise Royal Albatross
18.Skyline Luge Singapore Ticket
19.GoGreen Sentosa Bike and Kick Scooter Rental
20.Giant Swing at Skypark Sentosa
21.Puzzle Hunt Adventure – Siloso Beach Sentosa
22.Sentosa Pass Singapore
23.Resorts World Sentosa Pass
24.Siloso Beach
25.Palawan Beach
26.Tanjong Beach
27.Tanjong Beach Club 
28.FOC Sentosa
29.Rumours Beach Club
30.Ola Beach Club
31.Bikini Bar
32.Coastes Singapore
33.Bob’s Bar

Sentosa எப்படி செல்லலாம்?

சிங்கப்பூரின் மையத்திலிருந்து சென்டோசாவை கார், பேருந்து, மோனோரயில், கேபிள் கார் வழியாக அடையலாம்:ரயிலில், Harbourfront Station க்கு செல்லலாம்.

ஒரு அழகிய இயற்கை காட்சிகளுடன் கூடிய பயணத்திற்கு, Harbourfront Station லிருந்து கேபிள் காரில் சென்டோசா தீவுக்குச் செல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

இத்தனை சிறப்புடைய Sentosa தீவிற்கு செல்லும் முன் அதன் வரலாறு தெரிந்து செல்வது உங்கள் பயணத்தை மேலும் அர்த்தமுடை யதாகவும், மகிழ்ச்சியானதாகவும் மாற்றக்கூடும்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை உள்ளதை உள்ளபடி தெரிந்து கொள்ள தமிழ் சாகா ஃபேஸ்புக் பக்கத்தை நீங்க ஃபாலோ பண்ணலாம்.

Related posts