TamilSaaga

மக்களே! எச்சரிக்கை! உங்கள் வங்கிப் பணத்தைமொத்தமாக சுருட்ட மோசடிக்காரர்கள் செய்யும் உலகமகா யுக்தி!!

சிங்கப்பூரில் கடந்த டிசம்பர் 2023 முதல், வங்கிகள்அல்லது வங்கி ஊழியர்களைப் போலஆள்மாறாட்டம் செய்து, வாடிக்கையாளர்களுக்குகுறுஞ்செய்தி(SMS) அனுப்புவதன் வாயிலாகபணமோசடி செய்யும் வழக்குகள் அதிகரித்துள்ளன.

புத்தாண்டு (2024) பிறந்து முதல் இரண்டு வாரங்களில் மட்டும் குறைந்தது 219 DBS வங்கிவாடிக்கையாளர்கள் ஏமாற்றப்பட்டு, சுமார் $446,000 மொத்த பண இழப்பைச் சந்தித்துள்ளனர் என்றுசிங்கப்பூர் காவல் துறையும் (SPF), பாதிக்கப்பட்டவங்கியுமான DBS ம் இணைந்து கடந்தஞாயிற்றுக்கிழமை அன்று (ஜனவரி 14) தங்களதுகூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன.

இந்த மோசடியின் பெரும்பாலான சமயங்களில்மோசடிக்காரர்கள், வங்கியின்வாடிக்கையாளர்களுக்கு , வெளிநாட்டு எண்கள்அல்லது உள்ளூர் எண்களைக் கொண்ட கோரப்படாத குறுந்தகவல்களை (SMS) முதலில்அனுப்புகிறார்கள்.

அதில் தாங்கள் DBS, POSB வங்கிகளைபிரதிநிதித்துவம் செய்வதாகவும், சம்பந்தப்பட்டவாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்கைஅணுகுவதற்கு அங்கீகரிக்கப்படாத முயற்சிகள்நடைபெறுவதாகவும், அதனை தடுத்து நிறுத்திடஉடனே அவர்கள் அனுப்பிய குறுந்தகவலில்இருக்கும் இணைப்பை ( link )சொடுக்குமாறும்எச்சரிக்கிறார்கள்.

இதனை நம்பி , யோசியாமல் அந்த இணைப்பைசொடுக்கும் வாடிக்கையாளர்களை, அந்தஇணைப்பானது போலியான DBS வங்கிஇணையதளத்திற்குக் கொண்டு செல்கிறது.  

அது போலியான இணையதளம் என்று அறியாதவாடிக்கையாளர்களை, அதில் கேட்கப்படும்அவர்களது ரகசிய வங்கி விவரங்கள், OTP போன்றவற்றை பதியுமாறு வேண்டப்படுகிறார்கள்.

இந்த மோசடியை அறியாமல், வாடிக்கையாளர்கள்தங்கள் ரகசிய வங்கி விவரங்களை அளித்தவுடன், மோசடிக்காரர்கள் அதனைப் பயன்படுத்திவாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்கிலிருந்துபணத்தை எடுத்து விடுகின்றனர் .

சில சம்பவங்களில் DBS வங்கியின் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் போல் நடித்து WhatsApp வழி தகவல் அனுப்பி மக்களை ஏமாற்றும் உத்தியையும்காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வங்கிக்கணக்குகளில் அங்கீகரிக்கப்படாதபரிவர்த்தனைகளைக் கண்டறிந்தால் மட்டுமேதான்தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொள்வார்கள்.

பொதுமக்கள் இத்தகைய பண மோசடிகளில்சிக்காமல் இருக்க காவல்துறை, பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை   அறிவுறுத்தியுள்ளது.

• வாடிக்கையாளர்கள் ScamShield எனும்செயலியைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துமாறு காவல்துறைகேட்டுக்கொண்டுள்ளது.இதன் மூலம்தேவையற்ற மோசடி அழைப்புகள் மற்றும்மோசடி

குறுந்தகவல்களைத் தவிர்க்க இயலும்.

• மேலும் DBS வங்கி, வாடிக்கையாளர்களுக்குSMS வழியாக கிளிக் செய்யக்கூடிய இணைப்புகளை அனுப்பாது என்றும் மேலும்பொதுமக்கள் OTPகள் உட்பட தனிப்பட்ட அல்லது வங்கி விவரங்களை யாருக்கும் தெரிவிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

• முக்கியமாக மோசடிகள் குறித்து குடும்பத்தில் உள்ளவர்கள், நண்பர்கள் ஆகியோருக்குத்தெரியப்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்றும், தேவைப்படின் புகார் அளிக்குமாறும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் இது போன்ற குற்றங்கள் தொடர்பான ஏதேனும் தகவல் இருந்தால் அல்லது பொதுமக்களுக்கு சந்தேகம் இருந்தால், 1800-255-0000 என்ற எண்ணில் காவல்துறையின்அவசர எண்ணை அழைக்கலாம் அல்லது www.police.gov.sg/iwitness என்ற இணையதளத்தை அணுகலாம்.அனைத்துதகவல்களும் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என்றும்  அவசர காவல்துறை உதவி தேவைப்பட்டால், தயவுசெய்து ‘999’ ஐ டயல் செய்யுவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .

• மோசடிகள் பற்றிய கூடுதல் தகவலுக்கு, பொதுமக்கள் www.scamalert.sg ஐப்பார்வையிடலாம் அல்லது  

1800-722-6688 என்ற எண்ணில் ஊழல் எதிர்ப்பு ஹெல்ப்லைனையும் அழைக்கலாம். 

இத்தகைய மோசடிகளை எதிர்த்துப் போராடுவதுஒரு சமூக முயற்சி.  அனைவரும் ஒன்றாக, நமது சமூகத்தைப் பாதுகாக்க, விழிப்புணர்வுடன்செயல்பட்டு மோசடிகளுக்கு எதிராகச்செயல்பட்டால் நிச்சயம் நமது பணத்தைக்காத்திடலாம்.

எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும்அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்றகுறளுக்கு ஏற்றவாறு, எந்த தகவல் எந்தமுறையில் வந்தாலும், அதை நாம் அப்படியேஏற்காமல் விழிப்புடன் யோசித்து செயல்பட்டால்இத்தகைய மோசடிகளிலிருந்து எளிதாக தப்பிவிடலாம்.

Related posts