TamilSaaga

“முடிந்தது VTL தடை”, இந்திய – சிங்கப்பூர் VTL பயணத்தில் மாற்றங்கள் இருக்குமா? – எத்தனை PCR சோதனை எடுக்கவேண்டும்?

தடுப்பூசி போடப்பட்ட பயணப் பாதை (VTL) விமானங்கள் மற்றும் பேருந்துகளுக்கான அனைத்து புதிய டிக்கெட் விற்பனைகளும் கடந்த ஆண்டு டிசம்பர் 23 முதல் இந்த ஆண்டு நேற்று ஜனவரி 20 இரவு 11.59 வரை முடக்கப்படும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) கடந்த ஆண்டு டிசம்பர் 22 அன்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது. வெளிநாடுகளில் இருந்து வந்த ஓமிக்ரான் வழக்குகளுக்கு சிங்கப்பூரின் வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்துவதே இந்த நடவடிக்கை என்று அமைச்சகம் அப்போது தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்றுடன் VTL தடை முடிந்துள்ள நிலையில் மீண்டும் VTL சேவைகள் இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள் : திருச்சி – சிங்கப்பூர் : பிப்ரவரி மாதத்தில் 20 விமானங்களை இயக்கும் Scoot : கோவை, திருவனந்தபுரம் சேவையும் உண்டு

ஆனால் இந்த VTL விண்ணப்பிகள் முன்பைவிட தற்போது 50 சதவிகித அளவிற்கு மட்டுமே வழங்கப்படும் என்பதையும் சிங்கப்பூர் அரசு முன்பே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உண்மையில் தமிழ்நாடு – சிங்கப்பூர் VTL சேவை டிக்கெட் புக்கிங் எவ்வாறு நடந்து வருகின்றது என்பது குறித்து பல ஆண்டுகளாக சிங்கப்பூருக்கு விமான டிக்கெட் முன்பதிவு சேவைகளை வழங்கி வரும் திருச்சி நந்தனா ஏர் ட்ராவல்ஸ் நிறுவனரிடம் கேட்டபோது அவர் சில தகவல்களை நமது தமிழ் தமிழ் சாகாவிடம் பகிர்ந்துகொண்டார்.

“தற்போது இந்த 2022ம் ஆண்டில் சிங்கப்பூர் – திருச்சி இருமார்கமாக ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் வரை டிக்கெட் புக்கிங் நடந்து வருவதாகவும். ஆனால் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் மிக குறைந்த அளவிலேயே VTL வழியாக சிங்கப்பூர் வர அனுமதிக்கப்படுவதாகவும்” அவர் கூறினார். அதே போல VTL அல்லாத முறையில் சிங்கப்பூருக்கு பயணிக்க Entry Approval என்பது அவசியமானது என்பதால் அதையும் சிங்கப்பூர் அரசு ஒரு நாளைக்கு தோராயமாக 50 என்ற அளவில் மட்டுமே வழங்கி வருகின்றது என்றும் அவர் கூறினார். “அதே போல சிலர் சீன புத்தாண்டிற்கு பிறகு பல தளர்வுகள் சிங்கப்பூரில் அறிவிக்கப்படும் என்பதால் முன்பே டிக்கெட்களை அதிக அளவில் முன்பதிவு செய்து வைக்க வாய்ப்பு உள்ளது”.

“ஆனால் Entry Approval இல்லாமல் டிக்கெட் முன்பதிவு செய்வது பெரும் சிரமத்தையும் பணவீரயத்தையும் உண்டாக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆகையால் சரியான Entry Approval அல்லது VTL அனுமதி இருப்பவர்கள் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்தால் சிறப்பாக இருக்கும்” என்றார் அவர்.

VTL விதிகளில் மற்றம் உண்டா?

கடந்த ஆண்டு டிசம்பர் 23 முதல் புதிய விதிகள் ஏற்கனவே அமலுக்கு வந்துள்ளதால், இன்று ஜனவரி 21 2022 அன்று எதுவும் மாற்றப்படவில்லை. முன்பிருந்த விதிகளே தொடரும்.

VTLகளுக்கான சோதனைத் தேவைகள் என்ன?

நவம்பர் பிற்பகுதியில் Omicron மாறுபாடு வெளிப்படுவதற்கு முன்பு, VTL களின் கீழ் சிங்கப்பூருக்குள் நுழையும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட விமானப் பயணிகள், புறப்படுவதற்கு முன்பு கோவிட்-19 பாலிமரேஸ் சங்கிலி எதிர்வினை (PCR) சோதனையை எடுக்க வேண்டியிருந்தது, மேலும் அவர்கள் சிங்கப்பூர் வந்திறங்கியதும் ஒரு சோதனை மேற்கொள்ளப்படவேண்டும். நில VTL கீழ் நுழையும் பயணிகள், புறப்படுவதற்கு முன் கோவிட்-19 PCR சோதனை அல்லது ஆன்டிஜென் ரேபிட் டெஸ்ட் (ART) மற்றும் வந்தவுடன் ART சோதனை மேற்கொள்ள வேண்டும். இரண்டு சோதனைகளிலும் எதிர்மறையான சோதனைக்குப் பிறகு அவர்கள் தங்கள் செயல்பாடுகளைச் செய்ய அனுமதிக்கப்படுவர்.

இதையும் படியுங்கள் : மக்களே உஷார்.. “சிங்கப்பூரில் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்ட Bak Kwa” : எச்சரிக்கை விடுக்கும் சிங்கப்பூர் STB

சிங்கப்பூர் VTLன் கீழ் உள்ள நாடுகள் எவை?

சிங்கப்பூர் குடியரசு இதுவரை 24 நாடுகளுக்கு விமானப் பயணத்திற்கான VTLகளை நிறுவியுள்ளது. அவை ஆஸ்திரேலியா, புருனே, கம்போடியா, கனடா, டென்மார்க், பிஜி, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, மலேசியா, மாலத்தீவு, நெதர்லாந்து, தென் கொரியா, ஸ்பெயின், இலங்கை, சுவீடன், சுவிட்சர்லாந்து, தாய்லாந்து, துருக்கி, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா ஆகியவை ஆகும்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts