TamilSaaga

“சிங்கப்பூர் கோவன் ஹாக்கர் சென்டர்” : அறிமுகமாகும் புதிய திட்டம் – PHC அமைப்பு அறிவிப்பு

சிங்கப்பூரில் உணவன்கடிகளில் ஒரு புதிய முன்னெடுப்பாக PHC அமைப்பின் தலைவர் எட்வர்ட் டி சில்வா தலைமையில், அத்துறையை சார்ந்த தூதர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 22) உணவை உண்டு முடித்த பிறகு தட்டுகள் மற்றும் ஸ்பூன்களை முறையாக அப்புறப்படுத்துமாறும் மீதமான உணவை முறையாக அப்புறப்படுத்துமாறும் மக்களை ஊக்குவித்தனர்.

மேலும் கடந்த ஏப்ரல் மாதத்தில் PHCயால் தொடங்கப்பட்ட இந்த நிகழ்வின் மூலம் மக்கள் சிங்கப்பூரை சுத்தமாக வைத்துக்கொள்ள முடியும் என்பது நினைவுகூரத்தக்கது. ஹாக்கர் மையங்களில் உணவருந்தும் மக்கள் தங்கள் தட்டுகளைத் திருப்பித் தருவது மற்றும் பயன்படுத்தப்பட்ட tissues,ஸ்ட்ராகள், மீதமான உணவு மற்றும் மேஜை குப்பைகளை அகற்றுவது கட்டாயமாகும்.

உணவகங்கள் மற்றும் காபி கடைகள் போன்ற இடங்களில் சாப்பிடும் புரவலர்கள் இந்த வருடத்தின் நான்காவது காலாண்டில் இருந்து தங்கள் தட்டுகளை திருப்பித் தர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. செப்டம்பர் 1 முதல், தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் (NEA) பொது சாப்பாட்டு இடங்களில் தூய்மை ஆலோசனையை பின்பற்றாதவர்களுக்கு எதிராக அமல்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதல் முறை இந்த சட்டத்தை மீறுபவர்கள் எழுத்துப்பூர்வ எச்சரிக்கையைப் பெறுவார்கள். இரண்டாவது முறையும் மீறுபவர்களுக்கு 300 வெள்ளி அபராதம் விதிக்கப்படும். அடுத்தடுத்த முறையும் மீறுபவர்களுக்கு நீதிமன்ற அபராதம் விதிக்கப்படலாம் என்று NEA தெரிவித்துள்ளது.

Related posts