TamilSaaga

“சிங்கப்பூரில் உள்ள உலகின் முதல் மிதக்கும் Apple Store” : Tamil Saaga Singaporன் பிரத்தியேக காணொளி – வாங்க பார்க்கலாம்

ஆப்பிள் மென்பொருள் சாதனங்கள் என்றாலே விரும்பாத மக்களே இல்லை என்ற அளவிற்க்கு உலக அளவில் மிகவும் பிரபலமான ஒன்று தான் ஆப்பிள் நிறுவனம். போன், லேப்டாப், ஐ-பாட் என்று பல சாதனங்களை மக்களுக்கு வழங்கி வருகின்றது. ஆப்பிள் பொருட்களை பயன்படுத்தினாலே ஒரு தனி மவுசு தான். இந்நிலையில் தான் கடந்த 2020ம் ஆண்டு நமது சிங்கப்பூரில் புகழ்பெற்ற Marina Bay Sands பகுதியில் திறக்கப்பட்டது ஒரு ஆப்பிள் ஸ்டார்.

ஆனால் உலகின் பல பகுதிகளில் பல ஆப்பிள் ஸ்டோர்கள் இருந்தாலும் நமது சிங்கப்பூரில் அமைந்துள்ள இந்த ஆப்பிள் ஸ்டார் சற்று வித்தியாசமானது. ஆம் இது தான் உலகில் முதல் மிதக்கும் ஆப்பிள் ஸ்டோர். சிங்கப்பூரின் அழகிய Marina Bay Sands கடற்படுக்கையில் அமைந்துள்ளது இந்த அழகிய ஆப்பிள் ஸ்டார்.

உலகின் முதல் மிதக்கும் ஆப்பிள் ஸ்டோர் – தமிழ் சாகா சிங்கப்பூரின் Exclusive காணொளி

இந்த ஸ்டோர் தண்ணீரால் செல்லப்பட்டுள்ளது. இந்த கடைக்குள் செல்லும்போதும் நமது அழகிய தீவின் கண்கொள்ளாக்காட்சியை 360 டிகிரி பனோரமிக் காட்சியாக வழங்குகிறது என்றால் அது சற்றும் மிகையல்ல. கட்டமைப்பு இணைப்பிற்காக 10 குறுகிய செங்குத்து முல்லியன் கொண்ட 114 கண்ணாடிகள் கொண்ட இந்த கோளம் உலக கட்டுமானத்துறையில் ஒரு மையில்கல் என்று ஆப்பிள் கூறுகிறது. எண்ணற்ற பல சிறப்புகளை கொண்ட இந்த கட்டிடம் நாள்தோறும் மக்கள் பலரை தன்னைநோக்கி ஈர்க்கிறது.

இந்நிலையில் நமது தமிழ் சாகா சிங்கப்பூர் வாசகர்களுக்காக இந்த அழகிய ஆப்பிள் ஸ்டோர்க்குள் உங்களை பிரத்தியேகமாக அழைத்துச்செல்கின்றது நமது தமிழ் சாகா சிங்கப்பூர் குழு. நமது செய்தியாளர் உங்கள் அனைவரையும் இந்த அழகிய கட்டிடத்திற்குள் ஒரு இன்ப உலா அழைத்து செல்கின்றார். மேலும் இதுபோன்ற பல சுவாரசியமான தகவல்கள் மற்றும் காணொளிகளுடன் உங்களை விரைவில் சந்திக்கிறோம்.

Related posts