TamilSaaga

சிங்கப்பூர் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் (employment agencies)பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை

சிங்கப்பூர் : வேலைக்கு ஆட்கள் தேவைப்படும் நிறுவனங்களுக்கும், வேலை தேடுபவர்களுக்கு இடையில் நடுநிலையாளராக இருந்து செயல்படும் அமைப்புக்களை வேலைவாய்ப்பு நிறுவனங்கள் என்கிறோம். சிங்கப்பூரில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்பு நிறுவனங்கள் உள்ளன. சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்லும் வெளிநாட்டு பணியாளர்கள் இந்த வேலைவாய்ப்பு நிறுவனங்கள் பற்றி கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் நடத்துவதற்கு MOM (Ministry of manpower)சில குறிப்பிட்ட விதிமுறைகளை வகுத்துள்ளது.

சிங்கப்பூர் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை :

  • சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்துவதற்கு முதலில் சிங்கப்பூர் அரசில் பதிவு செய்திருக்க வேண்டும்.
  • அவர்களுக்கு என்று தனியாக அலுவலகம் இருக்க வேண்டும்.
  • Ministry of manpower ஆல் உரிமம் (licence) பெற்றிருக்க வேண்டும்.
  • பணியாளர்கள் தாங்கள் வேலைக்காக அணுகும் வேலைவாய்ப்பு நிறுவனம் நம்பிக்கையானது தானா, சட்டப்பூர்வமானது தானா என தெரிந்து கொள்ள Ministry of manpower இணையதளத்திற்கு சென்று சரிபார்த்துக் கொள்ளலாம்.
  • வேலைவாய்ப்பு நிறுவனங்கள் பணியாளர்களிடம் அவர்களின் ஒரு மாத சம்பளத்திற்கு அதிகமாக கட்டணம் வசூல் செய்யக் கூடாது. பணியாளரின் 2 மாத சம்பளத்திற்கு மேலான தொகையை கட்டணமாக வசூல் செய்தால் அந்த வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு அதிக தொகை வசூல் செய்ததற்காக அபராதம் விதிக்கப்படும். அதாவது பணியாளரின் ஆண்டு சம்பள தொகையில் இருந்து 15 முதல் 25 சதவீதத்தை மட்டுமே கட்டணமாக பெற வேண்டும் என Ministry of manpower ன் விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • தனி நபர்கள் யார் ஒருவர், உரிய செல்லத்தக்க லைசன்ஸ் இல்லாமல் வேலைவாய்ப்பு நிறுவனம் அல்லது அமைப்பு நடத்தினால் அவர்களுக்கு அபராதமோ, சிறை தண்டணையோ அல்லத இரண்டுமோ விதிக்கப்படும்.
  • வேலைவாய்ப்பு நிறுவனம் லைசன்ஸ் பெற்றது தானா என்பதை go.gov.sg/ea-directory என்ற இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம். அதில் முறையாக பதிவு செய்து, உரிமம் பெற்ற வேலைவாய்ப்பு நிறுவனங்களின் முழுமையான பட்டியல் இடம்பெற்றிருக்கும்.
  • சிங்கப்பூரை பொருத்தவரை வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்துவதற்கு சில தகுதிகள் கண்டிப்பாக இருக்க வேண்டும். அப்படி தகுதி இருப்பவர்களுக்கு மட்டுமே Ministry of manpower உரிமம் வழங்குகிறது.
  • சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு நிறுவனம் துவங்க வேண்டும் என்றால் Ministry of manpower கமிஷனருக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் அதோடு, விண்ணப்ப கட்டணமாக 400 சிங்கப்பூர் டாலர்களும் செலுத்த வேண்டும். விண்ணப்பம் அளித்த 7 நாட்களுக்குள் அவர்களின் விண்ணப்பம் ஏற்றப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்ற தகவல் தெரிவிக்கப்படும்.
  • விண்ணப்பம் ஏற்கப்படும் பட்சத்தில் உரிய ஆவணங்களை செலுத்தி பதிவு செய்வது, லைசன்ஸ் பெறுவதுடன், பிணைத் தொகையும் செலுத்த வேண்டும்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து
தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்

Related posts