TamilSaaga

பூனைகளை காயப்படுத்தியவருக்கு 12 வார சிறை : “இந்த தண்டனை போதாது” – கடுப்பான விலங்கு ஆர்வலர்கள்

சிங்கப்பூர் ஆங் மோ கியோவில் 11 பூனைகளை பலமாக காயப்படுத்திய ஒருவருக்கு கடந்த மாதம் சிங்கப்பூரில் 12 வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் சில விலங்கு ஆர்வலர்கள் இந்த தண்டனை போதாது என்றும். அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும் என்றும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவித்த பூனை நலச்சங்கத் தலைவர் தேனுக விஜயகுமார், குற்றம்சாட்டப்பட்டவர் மீது 7 குற்றச்சாட்டுகள் இருப்பதாக கூறினார். பூனைகள் எதுவும் இறக்கவில்லை என்றாலும், அந்த குற்றவாளியின் செயலால் 11 பூனைகள் பலத்த காயமடைந்துள்ளன மேலும் பராமரிப்பாளர்கள் நிறைய செலவுகளைச் சந்தித்தனர் என்று கூறினார்.

“18 மாத சிறைவாசத்தை கருத்தில் கொண்டால், பன்னிரண்டு வாரங்கள் என்பது மிகக் குறைவு. அவர் செய்த செயல்களின் நீண்ட தன்மையைக் கருத்தில் கொண்டு குற்றத்தின் தீவிரத்தை அது பிரதிபலிக்கவில்லை என்று பூனை நலச்சங்கத் தலைவர் தேனுக விஜயகுமார் கூறினார்.

விலங்குகளை கொடுமைப்படுத்துவதற்கு ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கு 18 மாதங்கள் வரை சிறைத்தண்டனை, மற்றும் 15,000 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். 37 வயதான லியோ வெய் லியாங் மூன்று குற்றங்களை ஒப்புக்கொண்டார், மேலும் நான்கு குற்றச்சாட்டுகள் தீர்ப்பின் போது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts