TamilSaaga

“இனி Check-In Counter-ல் வைத்து பணம் வசூலிக்க முடியாது”.. இந்திய பயணிகளுக்கு பெரிய நிம்மதி – Ministry of Civil Aviation வெளியிட்ட சூப்பர் அப்டேட்

இன்றைய காலக்கட்டத்தில் விமான பயணம் என்பது சர்வ சாதாரணமாக மாறிவிட்ட ஒரு விஷயம் என்றே கூறலாம். அந்த அளவிற்கு இன்று மக்கள் தங்கள் பயணத்தின்போது விமானங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விமான பயணங்களின்போது பயணிகள் எடுத்துச்செல்லும் Luggageகளை பெற்றுக்கொண்டு அதற்கு பதிலாக பயணிகளின் பெயர் மற்றும் பிற விவரங்கள் அடங்கிய போர்டிங் பாஸ் என்ற ஒரு சீட்டை விமான சேவை நிறுவனங்கள் அளித்து வருகின்றன.

இது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் என்றபோது ஒரு சில விமான சேவை நிறுவனங்கள் விமான டிக்கெட் இல்லாமல் இந்த போர்டிங் பாஸ் வழங்குவதற்கு என்று Check-In கவுண்டர்களில் ஒரு கணிசமான தொகையை பெற்று வருகின்றனர். இது சில பயணிகளை முகம் சுளிக்க கூட வைக்கின்றது என்றே கூறலாம், காரணம் ஏற்கனவே ஆயிரக்கணக்கான ரூபாயை டிக்கெட் தொகையாக பெற்றுவிட்டு மீண்டும் இதுபோன்ற சில தொகையை பெறுவது யாருக்குத்தான் பிடிக்கும்.

இந்நிலையில் இதுபோன்று போர்டிங் பாஸ் பெறும் சமயத்தில் check-in கவுண்டர்களில் வைத்து பணம் பெறுவது குறித்து புதிய அப்டேட் ஒன்று வந்துள்ளது. அதாவது இனி அப்படி பணம் வசூலிக்கும் விமான சேவை நிறுவனங்களால் மேற்கூறிய வகையில் பணம் பெற முடியாது.

சிங்கப்பூர் முழுக்க 95 சதவிகித Coverage.. அசுர வேகத்தில் நகரும் Singtel – 5G சேவையில் புதிய உலக சாதனை படைத்த நம்ம சிங்கப்பூர்

அண்டை நாடான இந்தியாவின் சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் இதுபோன்ற பயணிகளிடம் இருந்து கணிசமான அளவில் பணம் பெறவுதை நிறுத்த வேண்டும் என்று கடுமையாக கூறியுள்ளது. ஆகவே இனி போர்டிங் பாஸ் வகையில் இனி கூடுதல் கட்டணம் யாராலும் வசூலிக்க முடியாது.

இண்டிகோ, spice jet போன்ற வெகு சில நிறுவனங்கள் check-in கவுண்டர்களின் போர்டிங் பாஸ் பெற ஒரு ஒவ்வொரு பயணியிடமும் சுமார் 200 ரூபாய் வசூல் செய்வதாக கூறப்படுகிறது. ஆகவே இனி இதுபோன்ற கூடுதல் தொகையை வசூலிக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts