TamilSaaga

“வர்த்தக விமானங்களை மீண்டும் தொடங்க திட்டம்” : இந்தியா – சிங்கப்பூர் உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை

சென்னை, டெல்லி மற்றும் மும்பையில் இருந்து தலா இரண்டு தினசரி விமானங்களுடன் திட்டமிடப்பட்ட வணிக சேவைகளை மறுதொடக்கம் செய்ய சிங்கப்பூர் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது இந்திய அரசு. தற்போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மூலம் நாடு திரும்பும் பணி மட்டுமே வந்த பாரத் திட்டத்தின் கீழ் இருநாடுகளுக்கு இடையே சென்று வருகின்றனர்.

இதையும் படியுங்கள் : “தமிழகம் முதல் கோலாலம்பூர் வரை” : வெளியானது டிசம்பர் மாத பட்டியல்

மேலும் வரும் 29ம் தேதி முதல் சிங்கப்பூர் தனது VTL சேவைகளை இந்தியாவிற்கு திறக்கவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சேவை தொடங்கப்பட்டது இந்தியர்கள் தனிமைப்படுத்துதல் இன்றி சிங்கப்பூருக்குள் நுழைய வழிபிறக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சிங்கப்பூர் வந்துள்ள இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் சிங்கப்பூரில் அமைச்சர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார்.

தற்போது இந்தியாவிலும் பெருந்தொற்று நிலைமை சீராகி வருவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் தமிழர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர் என்பதும் நினைவுகூரத்தக்கது. இந்தியர்கள் வரும் 22ம் தேதி முதல் VTL சேவைகளுக்கான VTP எனப்படும் Vaccinated Travel Pass-க்கு அப்ளை செய்யலாம் என்றும் சிங்கப்பூர் சிவில் விமானத்துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

மூன்று நாள் பயணமாக இங்கு வந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நமது போக்குவரத்து அமைச்சர் ஈஸ்வரன் அவர்களை சந்தித்து விரைவில் இருநாட்டு விமான போக்குவரத்துக்கு குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றார்.

Related posts