TamilSaaga

“தமிழகம் முதல் கோலாலம்பூர் வரை” : வெளியானது டிசம்பர் மாத பட்டியல் – 20க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கம்

உலக அளவில் தற்போது மீண்டும் விமான சேவைகள் மீண்டு வருகின்றது, இன்னும் பெருந்தொற்றின் தாக்கம் 100 சதவிகிதம் மறையவில்லை என்றாலும் தடுப்பூசிகளால் மக்களிடம் புதிய நம்பிக்கை பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மலேசிய தலைநகரான கோலாலம்பூரில் இருந்து தமிழகம் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கு வந்தே பாரத் திட்டத்தின் கீழ் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல திருச்சி, சென்னை மற்றும் கொச்சி ஆகிய நகரங்களில் இருந்தும் சிங்கப்பூருக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதையும் படியுங்கள் : சிங்கப்பூர் – திருச்சி கூடுதல் விமானங்கள் இயக்க வாய்ப்பு

இந்நிலையில் தமிழகம் மற்றும் கொச்சியில் இருந்து கோலாலம்பூருக்கு இருமார்கமாக இயக்கப்படும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கான விமான பட்டியலை தற்போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 30க்கும் மேற்பட்ட விமானங்கள் வரும் டிசம்பர் மாதத்தில் இயக்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

வெளியான தகவலின்படி..

திருச்சி – கோலாலம்பூர்

திருச்சி முதல் கோலாலம்பூர் வரை வரும் டிசம்பர் மாதம் 2,5,67,9,12,13,14,1,19,20,21,23,26,27,28,30 ஆகிய தேதிகளில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் இயக்கப்படவுள்ளன.

சென்னை – கோலாலம்பூர்

சென்னை முதல் கோலாலம்பூர் வரை வரும் டிசம்பர் மாதம் 2,9,16,23,30 ஆகிய தேதிகளில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் இயக்கப்படவுள்ளன.

கொச்சி – கோலாலம்பூர்

கொச்சி முதல் கோலாலம்பூர் வரை வரும் டிசம்பர் மாதம் 1,8,15,22,29 ஆகிய தேதிகளில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் இயக்கப்படவுள்ளன.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts