TamilSaaga

“தடுப்பூசி போட்டுவிடீர்களா?” – தமிழ் பதாகைகளுடன் சிங்கப்பூரின் முக்கிய சாலைகளில் வலம் வரும் “டிரக்”

சிங்கப்பூரில் பெருந்தொற்றுக்கு எதிரான தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை அதிக முதியவர்களிடம் சென்றடையவைக்கும் முயற்சியில், தடுப்பூசி பற்றிய செய்திகளை பரப்புவதற்காக அடுத்த சில வாரங்களில் இரண்டு லாரிகள் சிங்கப்பூரின் முக்கிய சாலைகளின் வழியாக செல்லும் என்று தகவல் தொடர்பு மற்றும் தகவல் அமைச்சகம் (எம்சிஐ) இன்று சனிக்கிழமை (ஆகஸ்ட் 7) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

IGotMyShot என்ற அந்த லாரிகள் கடந்த வெள்ளிக்கிழமையன்று தனது பயணத்தை தொடங்கிய அந்த வாகனம், சுகாதார அமைச்சகத்தின் மொபைல் தடுப்பூசி குழுக்களான வூட்லேண்ட்ஸ், யிஷுன், புக்கிட் மேரா, ஹூகாங், செங்காங், பெடோக், டம்பைன்ஸ் மற்றும் ஜூரோங் வெஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் பயன்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த லாரிகள் சிங்கப்பூரின் நான்கு அதிகாரப்பூர்வ மொழிகளிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கிளை மொழிகளிலும் முன்பதிவு செய்யப்பட்ட செய்திகளை ஒளிபரப்புவார்கள். மற்றும் போஸ்டர்களைக் அளிப்பார்கள், தடுப்பூசி போடப்படாத முதியவர்களை அருகில் உள்ள மொபைல் தடுப்பூசி குழுக்களுடன் அழைத்துச் செல்ல அவர்கள் அழைப்பு விடுக்கிறார்கள்.

சிங்கப்பூரின் சுகாதார அமைச்சர் ஓங் யே குங் கடந்த வெள்ளிக்கிழமை கூறியதாவது, இதுவரை பயன்படுத்தப்பட்ட 10 மொபைல் தடுப்பூசி குழுக்கள் 60 வயதுக்கு மேற்பட்ட சுமார் 3,340 முதியவர்களுக்கு தடுப்பூசி அளித்துள்ளன என்று கூறினார்.

Related posts