TamilSaaga

சிங்கப்பூர் கட்டுமானத் துறை நிறுவனங்கள் எவ்வாறு பணியாளர்களை தேர்வு செய்கிறது?

சிங்கப்பூர் வேலைக்கு வரும் பல தொழிலாளர்கள் கட்டிடத் தொழில் மற்றும் கப்பல் பணிகளுக்காக வராங்க. எப்படி வராங்க, அதற்க்கு என்னென்ன வழிமுறைகள் இருக்கு? எப்படி நிறுவனங்கள் தங்கள் வேலையாட்களை தேர்ந்தெடுக்குது? அதற்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்?

இதையெல்லாம் குறித்த தகவல்கள் தான் இந்த பதிவு! ஒரு வேலை நீங்க சிங்கப்பூருக்கு கட்டிட வேலைக்காக வர நினைச்சா இத முழுசா படியுங்க!

முதல்ல நிறுவனங்கள் வேலையாட்களை எப்படி தேர்ந்தெடுக்குதுனு பாப்போம்! சில நிறுவங்கள் தங்கள் இணையவழி பக்கத்துல இதைக் குறித்த தகவல்களைப் பதிவிடுவாங்க. ஆனால் பல நிறுவனங்கள் இதற்காக ஏஜெண்ட்டுகளை வைத்திருக்கும். இந்த ஏஜெண்ட்டுகள் கம்பெனி HR நிர்வாகியோடு நேரடி தொடர்புல இருப்பாங்க. தேவையான தகவல்களைப் பெற்றபின் இதைக் குறித்து விளம்பரம் செய்வாங்க. ஏற்கனவே பணிபுரியும் தொழிலாளர்களின் பரிந்துரை, விளம்பரத்தைப் பார்த்து வரும் மக்கள் என தேவையான ஆட்களை திரட்டியபின் அவர்களது ஆவணங்களை சரிபார்ப்பர்.

அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் Pre Approval பெற்று தொழிலாளர்களை சிங்கப்பூர் அழைத்து வருவர்.

இப்படித் தான் ஒரு கட்டிடத் தொழிலாளர் நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். சிங்கப்பூர் வந்த பின்னர் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் முக்கியமான பயிற்சிகளை அவர்கள் முடிக்க வேண்டும்.

முதலில் Setting-In Program எனப்படும் ஒரு நாள் பயிற்சி. முதல் முறை சிங்கப்பூர் வருபவர் மற்றும் ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்குப் பின் புதிதாக சிங்கப்பூர் வருபவர் என இந்த இரு பிரிவினரும் இந்த பயிற்சி வகுப்பை முடித்தாக வேண்டும். அதில் இங்கு உள்ள பொதுவான விதிகள் மற்றும் வழிமுறைகள் குறித்த அறிவுரைகள் வழங்கப்படும்.

அடுத்ததாக வேலை தொடர்பான பயிற்சி. இதில் இரண்டு வகை உண்டு அனுபவம் மற்றும் திறமையைப் பொறுத்து 1. Basic Skill Test மற்றும் 2.High Skill Test

சிங்கப்பூர் வரும் Work Permit தொழிலாளர்கள் இந்த பயிற்சியை முடித்த பின்னரே முறையாக பணியமர்த்தப்படுவர். இல்லையென்றால் அவரின் விசா ரத்து செய்யப்படும்.

இந்த Skill Test பயிற்சியை 2 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும். மேலும் இரண்டு மாதங்களுக்குள் தேர்ச்சி பெற வேண்டும். இதற்காக அவர்களுக்குக் கொடுக்கப்படும் Pre approval எனப்படும் தற்காலிக அனுமதி 2 மாதங்கள் வரை செல்லுபடியாக வேண்டும்.
சரி எந்தெந்த பயிற்சிகள் கட்டாயம். அது தவிர வேறு எந்தெந்த பயிற்சிகள் உண்டு:

• Construction Safety Orientation Course (CSOC)
• Apply Workplace Safety and Health in Construction Site

Basic Skill Test ல் தேர்ச்சியுற இந்த இரண்டு பயிற்சிகளும் கட்டாயம் முடித்திருக்க வேண்டும்.

இது தவிர பல Welding, Plumbing, Electrical உள்ளிட்ட பல பிரிவுகளில் Level 1, Level 2 என பல்வேறு வகையான பயிற்சிகள் உண்டு. இதெல்லாம் High Skill Test-ல் அடங்கும்.

மேற்கண்ட பயிற்சிகளில் தேர்ச்சி பெற்ற பணியாளர்கள் மட்டுமே வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். மற்றவர்களுக்கு அவர்களின் விசா ரத்து செய்யப்பட்டு மீண்டும் இந்த செயல்முறை தொடரும்.

இதற்காக Singapore BCA – Building & Construction Authority உடன் பல கல்வி நிறுவனங்கள் இணைந்து இந்த பயிற்சிகளை வழங்கி வருது. இந்த பயிற்சிகளுக்கு உங்கள் வேலை நிறுவனம் விண்ணப்பித்துக் கொடுக்கும். இது குறித்து மேலும் தகவல்களை அறிந்துகொள்ள Building & Construction Authority-ன் அதிகாரப்பூர்வ இணையத்தைப் பார்வையிடுங்கள். https://www1.bca.gov.sg/

சிங்கப்பூர்-ல் எந்தெந்த நிறுவனங்கள் இந்த பயிற்சிகளை வழங்குகிறது?

ஒவ்வொரு பிரிவுகளுக்கும் அதில் கைதேர்ந்த கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களை BCA தேர்ந்தெடுத்துள்ளது. அதன் முழு விவரத்திற்கு கீழ்கண்ட ஆவணத்தைப் பார்வையிடவும்.

https://www1.bca.gov.sg/docs/default-source/docs-corp-buildsg/manpower/attccontacts.pdf

இதில் அந்த பயிற்சி நிறுவனத்தின் பெயர், தொடர்பு எண், முகவரி மற்றும் அவர்கள் கொடுக்கும் பயிற்சி சார்ந்த தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.

மற்றொரு முக்கிய செய்தி என்னன்னா BCA -வால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி மையங்கள் இந்தியாவுலயும் பல இருக்கு. சென்னை, ஹைதராபாத் போன்ற முக்கிய நகரங்கள்ல இவை அமைஞ்சிருக்கு.

இங்கே அந்த பயிற்சி மையங்களின் பெயர் மற்றும் அது அமைந்துள்ள ஊர்களின் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

https://www1.bca.gov.sg/docs/default-source/docs-corp-buildsg/manpower/tradeindia.pdf?sfvrsn=5a36524c_10

இந்த அனைத்து பயிற்சி மையங்களும் BCA வின் கீழ் இயங்கரத்தால, இங்கே பயிற்சி பெற BCA வின் அதிகாரப்பூரவ பக்கத்தில் தான் விண்ணப்பிக்க வேண்டும். வேலை நிறுவனங்கள் இதற்க்கு உதவி செய்யும்.

ஒவ்வொரு பயிற்சிக்கும் அதன் பிரிவு மற்றும் காலக் கெடு போன்றவற்றின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்படும். நீங்கள் இந்தியாவிலிருந்தே skill certificate உடன் செல்லும் வசதியும் இருப்பதால் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. ஆனால் இங்கே குறிப்பிட்ட எண்ணிக்கையில் பயிற்சி மையங்கள் அமைந்திருப்பதால், ஏராளமானோர் விண்ணப்பிக்கும் பொழுது சற்று கால தாமதம் ஏற்படலாம்.

இப்படித் தான் கட்டுமான நிறுவனங்கள் தொழிலாளர்களை பணியமர்த்துகிறது. இது தவிர தொழிலாளர்களை வேலைக்கு எடுக்கும் கம்பெனியின் நேரடி ஏஜெண்ட்டுக்கு தொழிலாளர் சார்பில் எந்த கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. இதற்கான கட்டணம் நிவனத்திடம் இருந்து வசூலிக்கப்படும்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்

Related posts