சிங்கப்பூரில் கட்டுமானம், கப்பல் கட்டும் தளம் மற்றும் Process (CMP) துறைகளில் உள்ள தொழிலாளர் பற்றாக்குறையை குறைக்க உதவுவதற்காக, இந்த துறைகளில் உள்ள தொழிலாளர்களுக்கான நுழைவுத் தேவைகளை நெறிப்படுத்துவதாக அதிகாரிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 6) தெரிவித்தனர். இந்தத் துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் தற்போது இரண்டு நுழைவுப் பாதைகள் வழியாக சிங்கப்பூர் வந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரில் ஒட்டுமொத்த இளைஞர்களையும் வெட்கப்பட வைத்துள்ள 75 வயது பாட்டி!
முதலாவதாக, குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கான தொழில்துறையின் தலைமையிலான End-to-End செயல்முறையின் கீழ் சிங்கப்பூர் வருகின்றனர். இரண்டாவதாக Work Pass Holder General Lane மூலம் வருகின்றனர், இது மற்ற நாடுகளில் நிலவும் எல்லை நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. நவம்பர் 1, 2021 முதல் நடைமுறையில் உள்ள விதியின்படி, கட்டாயம் சிங்கப்பூருக்கு வருவதற்கு முன் CMP துறைகளைச் சேர்ந்த அனைத்துத் தொழிலாளர்களுக்கும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும்.
இந்நிலையில் கட்டிடம் மற்றும் கட்டுமான ஆணையம் (BCA – Building and Construction Authority), மனிதவள அமைச்சகம் (MOM) மற்றும் பொருளாதார மேம்பாட்டு வாரியம் (EDB) ஆகியவற்றின் கூட்டு செய்திக்குறிப்பில், மார்ச் 13 முதல், தொழிலாளர்களுக்கான தொழில்துறையின் தலைமையிலான End-to-End செயல்முறை மூலம் சிங்கப்பூர் வருபவர்கள் இனி குறுகிய இரண்டு நாள் முன் புறப்பாடு தயாரிப்பு திட்டம் (PDPP – Pre Departure Preparatory Program) மூலம் நெறிப்படுத்தப்படுவார்கள்.
அதாவது மேற்குறிப்பிட்ட முறையின் மூலம் சிங்கப்பூர் வருபவர்கள் சிங்கப்பூர் வந்த பிறகு, தற்போதைய தேவைகளின்படி, மூன்று நாள் வீட்டில் தங்குவதற்கான அறிவிப்பை நிறைவேற்றவேண்டும். அதுவும் அந்த SHNனை நியமிக்கப்பட்ட MOM மையங்களில் நிறைவேற்ற வேண்டும். உலகளாவிய COVID-19 சூழ்நிலையைப் பொறுத்து PDPPன் கால அளவு சரிசெய்யப்படலாம்.
வங்கதேசம், இந்தியா மற்றும் மியான்மரில், மார்ச் 13 முதல் PDPP செயல்முறை கிடைக்கும், இந்த நாடுகளைச் சேர்ந்த பணி அனுமதி வைத்திருப்பவர்கள் அங்கு PDPP செயல்முறைக்கு உட்படுத்தப்படுவார்கள்.