TamilSaaga

“என்னால் வரையமுடியாதுனு சொன்னாங்க” – நான்கு கின்னஸ் உலக சாதனைகளை தகர்த்த சிங்கப்பூர் ஆர்ட்டிஸ்ட் Peter Draw!

சிங்கப்பூரில் 38 வயதான Peter Draw தான், பலருக்கு விருப்பமான Ai மற்றும் Aiko ஆகிய இரண்டு டிஜிட்டல் கதாபாத்திரங்களை உருவாக்கியவர். Ai என்ற ஒரு சிறுவன் மற்றும் அவனது Aiko என்ற Shiba Inu வகையை சேர்ந்த நாய் உலக அளவில் மிகவும் பிரபலம். சிறுவயதில், “இவனெல்லாம் எங்க வரையப்போகிறான்” என்று கேலி செய்தவர்கள் மத்தியில் இன்று பல உலக சாதனைகளை படைத்து கம்பீரமாய் நிற்கிறார் ஆர்ட்டிஸ்ட் பீட்டர் ட்ரா.

இந்தியர்கள் இனி சிங்கப்பூர் வந்தால்…

பீட்டருக்கு மூன்று வயதில் இருந்தே வரைவதில் அதீத ஆசை இருந்துள்ளது என்று அடிக்கடி அவர் தாய் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறார். எனக்கு இன்னும் நல்லா ஞாபகம் இருக்கு, ஒருமுறை காலண்டரின் ஒவ்வொரு பக்கத்தையும் நான் வரைவதை கண்டு என் அம்மா எனக்கு, என்னுடைய முதல் Drawing Kitஐ வாங்கித் தந்தது இன்றளவும் ஒரு இனிமையான நினைவாக உள்ளது என்றார் பீட்டர். நான் கலையை தொழில் ரீதியாக தொடர முடிவு ஆரம்பத்தில் செய்ததில்லை. ஆனால் நான் இளமையாக இருந்தபோது மறைந்த என் தாத்தாவிடம் – ஒரு நாள் சிறந்த கலைஞனாக மாறுவேன் என்று நான் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றினேன் என்று தான் கூறவேண்டும்.

மக்களை சிரிக்க வைக்க நான் வரைவேன் என்றும் என் தாத்தாவிடம் சொல்லியிருந்தேன், அதையும் நான் இப்போது செய்து வருகின்றேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. 2000மாவது ஆண்டு டிசம்பரில் தான், நான் ஒரு ஆர்டிஸ்டாக மாற வேண்டும் என்ற முடிவை எடுத்தேன், அதே மாதத்தில் தான் என் தாத்தா எங்களை விட்டு பிரிந்தார். இன்று உலகே போற்றும் ஆர்ட்டிஸ்ட் நான் என்றாலும் இது ஆரம்பித்தது 1990ல் தான். எனக்கு அப்போது ஆறு வயதாக இருந்தபோது, ​​ஆங் மோ கியோவில் உள்ள எனது HDB பிளாக்கிற்கு அருகில் இலவச கலைப் பாடம் சொல்லிக்கொடுக்கும் ஒரு இடத்திற்கு சென்றேன்.

அது என் வாழ்க்கையை மாற்றிய நாள் என்று அப்போது நான் உணரவில்லை, அங்கு நான் சென்றதும் எனக்கு பென்சிலை ஒழுங்காக பிடிக்க தெரியவில்லை, என்னால் நன்றாக வரைய முடியாது என்று என்னிடம் கூறப்பட்டது. உன் இலவச படங்கள் எல்லாம் முடிந்துவிட்டது, இனி நீ கற்க காசு தரவேண்டும் என்று கூற என்னால் அதை தரமுடியாமால் அங்கிருந்து வெளியேறினேன். அங்கு நடந்ததை வீட்டுக்கு சென்று என் தாத்தாவிடம் கூறினேன், அவர் உடனே உன்னை போல சிவப்பு உடை அணிந்து ஏறத்தாழ உன் போன்ற தலைமுடி ஸ்டைல் கொண்ட ஒரு பையனின் வாழ்க்கையும் இப்படித்தான் இருந்தது என்றார். ஆனால் உன்னை போல அவன் சோர்ந்துபோகவில்லை கடுமையாக உழைத்தான் இறுதியில் Picasso என்ற அந்த பையன் தான் உலக புகழ்பெற்ற Disneylandஐ உருவாக்கினான் என்றார்.

அந்த வயதில் அக்கதையை கேட்டு நரம்புகள் முறுக்கேறியது, அவமானத்தை அழிக்க தொடர்ச்சியாக என் கனவை நோக்கி நகர்ந்தேன். ஆனால் நான் கொஞ்சம் வளர்ந்த பிறகுதான் தெரிந்தது Picasso மற்றும் Disney ஆகிய இருவரும் வெவ்வேறு ஆட்கள் என்று. இதை நான் அவரிடம் சென்று கூறியபோது, ஓ அப்படியா? எனக்கும் தெரியாதே என்றார். ஆனால் என்னை ஊக்குவிக்க அவர் செய்த அந்த முயற்சி வீணாகவில்லை. 2000மாவது ஆண்டு அவர் இறந்தபோது தான் Picasso வரைந்த ஒரு Dove மற்றும் Disneylandன் Micky ஆகிய உருவங்களை முன்மாதிரியாக கொண்டு Ai மற்றும் Aiko கதாபாத்திரங்களுக்கு உருவம் கொடுக்க துவங்கினேன்.

உண்மையில் என் பெயர் Peter Zhuo, ஆனால் நான் பார்க்கும் குழந்தைகள் என்னை Zhuo என்ற சத்தத்துடன் ஒத்துப்போகும் Draw என்று அழைத்ததால் அதையே என் பெயராக மாற்றிக்கொண்டேன். அதன் பிறகு நிற வரைய ஆரம்பித்தேன் இதுவரை நான்கு கின்னஸ் சாதனைகள் படித்துள்ளேன் : உலகின் மிக நீளமான கேலிச்சித்திரம் (356 சதுர மீ) அக்டோபர் 1, 2007 அன்று. உலகின் மிகப்பெரிய கலைப் பாடம் (largest art lesson) (12 நாடுகளில் 1,893 பங்கேற்பாளர்கள்) அக்டோபர் 2, 2010 அன்று. அக்டோபர் 4, 2014 அன்று ஒரு தனிநபரால் (601மீ நீளம்) வரைந்த உலகின் மிகப்பெரிய ஓவியம். மற்றும் உலகின் மிக நீளமான Drawing (9.58 கிமீ நீளம்) அக்டோபர் 4, 2014.

சிங்கப்பூரில் குடியிருப்பு ஒன்றில் கொத்து கொத்தாக படையெடுத்த கரப்பான் பூச்சிகள் – “ஐயோ” என்று தெறித்தெடுத்து ஓடிய அக்கம்பக்கத்தினர்

என்னால் முடியாது என்றார்கள் ஆனால் இன்று நான் சாதித்துவிட்டேன், Ai மற்றும் Aiko கதாபாத்திரங்களுக்காக தினமும் நிறைய உழைக்கிறேன். உங்களை நம்புங்கள் அதுபோதும் என்கிறார் Peter Draw என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் Peter Zhuo.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts