TamilSaaga

வரி செலுத்தப்படாத 4,700க்கும் சிகரெட்டுகள் கட்டுக்கள் பறிமுதல் – 1 சிங்கப்பூரர் உள்பட மூவர் கைது

சிங்கப்பூரில் பெடோக் மற்றும் உட்லேண்ட்ஸில் நடந்த தேடுதல் நடவடிக்கைகளுக்குப் பிறகு, 4,700க்கும் மேற்பட்ட வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டதாக சிங்கப்பூர் சுங்கத்துறை இன்று திங்கள்கிழமை (ஆகஸ்ட் 23) வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது. சிங்கப்பூரர், சீன நாட்டவர் மற்றும் ஒரு மலேசியர் உள்பட மூன்று பேர் இந்த நிகழ்வின்போது கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட வேனில் இருந்து சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட லாரியில் பெட்டிகள் மாற்றப்படுவதை அதிகாரிகள் கவனித்ததாகவும். மேலும் கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி அன்று பெடோக் நார்த் ஸ்ட்ரீட் 5க்கு அருகில் ஒரு நடவடிக்கையை நடத்தியதாகவும் சிங்கப்பூர் சுங்கத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த சோதனையில் இரண்டு வாகனங்களில் 1,700 அட்டைப்பெட்டிகளும், அதில் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 44 வயதான சீன நாட்டவரான லாரி டிரைவர் கைது செய்யப்பட்டதாக சிங்கப்பூர் சுங்கத்துறை தெரிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து அதேநாள் மாலை உட்லேண்ட்ஸ் அவென்யூ 6 இல் நடந்த நடவடிக்கையின் போது, ​​அதிகாரிகள் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட மற்றொரு வேனில் இருந்து 2,996 அட்டைப்பெட்டிகள் மற்றும் வரி செலுத்தப்படாத 40 சிகரெட்டுகளை கண்டுபிடித்தனர். வேனின் ஓட்டுநர் 47 வயதான சிங்கப்பூரர் மற்றும் 54 வயது மலேசியர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Related posts