TamilSaaga

சிங்கப்பூரில் வேலைக்கு வர விரும்பும் இளைஞர்களுக்கு… தற்போது சிங்கையில் பணிபுரியும் நீங்கள் சொல்ல விரும்புவது?

இந்திய கலாச்சாரத்தை பொறுத்தவரை, அங்கெ குடும்பத்தில் ஒரு ஆண் மகன் பிறக்கிறார் என்றால், அவர் மேல் அத்தனை சுமைகளும் இறக்கி வைக்கப்படும். பணக்கார வீட்டுப் பையனாக இருந்தால், சம்பாதித்த சொத்துக்களையும், பேர் பெருமையையும் கட்டிக்காக்கும் சுமை, மிடில் கிளாஸ் வீட்டுப் பையனாக இருந்தால் குடும்பத்தையே காப்பாற்றும் சுமை, ஏழை வீட்டுப் பையனாக இருந்தால் பொருளாதார ரீதியில் தனது அடுத்த தலைமுறை வாழ்க்கையையே மாற்றும் சுமை என்று தகுதிக்கு ஏற்றார் போல் சுமைகள் உண்டு.

குறிப்பாக, இந்த பணத்தை சம்பாதிக்க மிடில் கிளாஸ் வீட்டு மகனும், ஏழை வீட்டு மகனும் படும் பாடு இருக்கே.. நாலு காசு பார்ப்பதற்குள் ஒவ்வொரு மாதமும் விழி பிதுங்கிவிடும். இந்தியாவில் இருந்தால் சம்பாதிக்கும் பணம் செலவுக்கே போதாது என்பதால், பெரும்பாலான இளைஞர்கள் தேர்வு செய்யும் வழி வெளிநாடு.

சிங்கப்பூரோ, மலேசியாவோ, அமீரகமோ… ஏதோ ஒரு நாட்டுக்கு போய் சம்பாதித்து அட்லீஸ்ட் சொந்தமாக ஒரு வீட்டையாவது கட்டிவிட வேண்டும் என்பதே ஒரு எளிய வீட்டு மகனின் கனவாக உள்ளது. இதில், குறிப்பாக இளைஞர்கள் முதலில் அதிகம் தேர்வு செய்யும் நாடு சிங்கப்பூர் தான். அமீரகமோ, மலேசியாவோ செல்வதைவிட கொஞ்சம் அதிகமாகவும் விரைவாகவும் சம்பாதிக்கக் கூடிய நாடாக சிங்கை இருப்பதே அதற்கு காரணம்.

மேலும் படிக்க – சிங்கப்பூர் இன்று (அக்.17) TOTO லாட்டரி குலுக்கல்… முதல் பரிசு 8,000,000 டாலர் தொகை.. இந்திய மதிப்பில் 65 கோடி ரூபாய் – ஓவர் நைட்டில் மில்லியனராகும் வாய்ப்பு!

இந்நிலையில், இப்போது சிங்கப்பூரில் நிலவும் பணி சூழல், நிலவரம் என்ன என்பது சிங்கையில் தற்போது பணிபுரியும் ஊழியர்களுக்கு தான் நன்றாக தெரியும். ஸோ, உங்களுக்கு அதில் அதிக அனுபவம் இருக்கும். எதார்த்தமும், உண்மை நிலையும் உங்களுக்கு மட்டுமே தெரியும்.

அப்படி பழுத்த அனுபவம் கொண்ட நீங்கள்… அதாவது சிங்கப்பூரில் தற்போது பணிபுரியும் ஊழியர்களாகிய நீங்கள், புதிதாக சிங்கைக்கு வேலைக்கு வர விரும்பும் இளைஞர்களுக்கு ஏதாவது சொல்ல வேண்டுமெனில், என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? உங்களது இந்த தகவல், அவர்களுக்கு யதார்த்த நிலையை புரிய வைப்பதாக அமைந்தால் இன்னும் சிறப்பு. புதிய இளைஞர்களுக்கு உங்களுடைய அட்வைஸ் பேருதவியாக அமையட்டும். உங்கள் கருத்துக்களை Comment-ல் தெரிவிக்கலாம்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” தளத்தை பின்தொடருங்கள்

Related posts