TamilSaaga

லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர் டெக்னீசியன்களுக்கு போனஸ் – சிங்கபூரின் TCLE அறிவிப்பு

சிங்கப்புரில் உள்ளூரில் உள்ள லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர் ஆகியவற்றின் தொழில்நுட்ப பணி செய்யும் வேலையாட்களுக்கு 2023 முதல் போனஸ் வழங்கப்படும் என TCLE –
Tripartite Cluster for Lift and Escalator தெரிவித்துள்ளது.

ஏற்கனவே PWM-இன் கீழ் உள்ள பணியாளர்கள் லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர் பணிகளை செய்து வருகிறார்கள். தற்போது இதனை விரிவாக்கம் செய்ய TCLE ஒப்புக்கொண்டு உள்ளது.

2018 ஆம் ஆண்டில் இந்த பணியாளர்களுக்கான ஊதிய அளவுகோலை PWM ஏற்றுக்கொண்டு 2023 வரை ஊதிய அட்டவணையை அறிவித்தது.

அடுத்த ஆண்டு முதல் அனைத்து லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர் பணிகளும் PWM கட்டிடங்கள் மற்றும் கட்டுமான ஆணையத்துடன் இணைக்கப்படும். இதில் பணியாற்றும் தொழிலாளர்களின் 2029 ஆம் ஆண்டு வரையிலான ஊதிய உயர்வு பட்டியலை TCLE வெளியிட்டுள்ளது.

Related posts