சிங்கப்பூரை பொறுத்தவரை கடந்த சில மாதங்களாக நோய் பரவல் கட்டுக்குள் இருந்த நிலையில், தற்போது KTV குழுமம் மூலமாக மீண்டும் தொற்று எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. 100க்கும் அதிகமான தொற்று இந்த குழுமத்தில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் தற்போது சிங்கப்பூரில் சிங்கப்பூர் உணவு மற்றும் பானம் விற்பனை நிலையங்களாக செயல்பட்டு வரும் கேடிவி லவுஞ்சுகளை சரிபார்க்க போலீசார் இந்த வார தொடக்கத்தில் தீவு முழுவதும் குற்ற எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.
ஜூலை 13 முதல் ஜூலை 15 வரையிலான இந்த சோதனை நடவடிக்கையின் போது, 27 விற்பனை நிலையங்களுக்குள் மொத்தம் 281 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர். மகளிர் சாசனம், குடிவரவு சட்டம் மற்றும் வெளிநாட்டு மனிதவள வேலைவாய்ப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் குற்றம்சாட்டப்பட்ட 20 முதல் 47 வயதுக்குட்பட்ட பல்வேறு தேசங்களைச் சேர்ந்த 29 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
ஜூலை 13 ம் தேதி நடந்த குற்ற எதிர்ப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து, 21 முதல் 34 வயதுக்குட்பட்ட பல்வேறு தேசங்களைச் சேர்ந்த 10 பெண்கள் குறுகிய கால வருகை பாஸ் அல்லது பணி பாஸ்கள் ரத்து செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.