TamilSaaga

சிங்கப்பூர்.. 34 சிறுமிகளிடம் சில்மிஷம் செய்த இளைஞன் : “ஓங்கியது நீதிபதி கமலாவின் நீதிக்கரங்கள்” – உபசரிக்க காத்திருக்கும் சிங்கை போலீஸ்

சிங்கப்பூரில் இளம் பெண்களிடமிருந்து ஆபாசமான புகைப்படங்களைப் பெரும் வக்ரபுத்தியோடு டான் ஜுன் ஜீ என்ற நபர், ஆட்ரி டே என்ற பெண்ணாக இணையத்தில் தன்னை கட்டிக்கொண்டு செயல்பட்டுள்ளார். 2017 மற்றும் 2018ம் ஆண்டுக்கு இடையில் இவருடைய இந்த போலி வலையில் சுமார் 25க்கும் அதிகமான இளம் பெண்கள் சிக்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கப்பூரில் “Kinder Surprise” சாக்லேட்டால் நோய் பரவும் அபாயம்.. பெற்றோர்களுக்கு SFA “அவசர” எச்சரிக்கை

முதலில் இணைய வழியில் தன்னை ஒரு பெண்ணாக கட்டிக்கொண்டு இளம் பெண்களை தேடியுள்ளான். Influencer மற்றும் பிற வேலைகள் வாங்கித்தருவதாக கூறி அந்த பெண்களை தங்களது வீட்டில் இருந்தபடியே போட்டோஷூட் செய்து அந்த புகைப்படங்களை தனக்கு அனுப்புமாறும் கேட்டுள்ளான். சில சமயங்களில் நிர்வாணமாக போட்டோஷூட் எடுக்கவும் அறிவுறுத்தியுள்ளான்.

ஒரு கட்டத்தில் 13 வயது சிறுமி ஒருவர் இவனுடைய வலையில் சிக்க, ஆட்ரி டே என்ற அந்த பெண்ணின் ஆண் உதவியாளர் போல தன்னை கட்டிக்கொண்டு தனது அலைபேசி பெண்ணை அந்த சிறுமியிடம் கொடுத்துள்ளான். தன்னை நேரில் சந்தித்து பாலியல் சேவைகளை வழங்குமாறும் வற்புறுத்தியுள்ளான் அந்த கயவன். அதுமட்டுமல்லாமல் அந்த சிறுமியை அவளது தோழிகள் கழிவறையில் ஆடை மாற்றுவதை அவர்களுக்கு தெரியாமல் படமெடுக்கவும் கூறியுள்ளான்.

இறுதியில் இன்று வியாழன் (ஏப்ரல் 7) அன்று, 25 வயதான டான் என்று அந்த நபருக்கு, மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் சிறுமிகளிடம் பாலியல் ரீதியாக தவறாக அணுகுதல் உள்பட தன் மீது சுமத்தப்பட்ட 11 குற்றச்சத்துக்களை அவன் ஒப்புக்கொண்டான். தீர்ப்பின்போது மேலும் 26 குற்றச்சாட்டுகள் கருத்தி எடுத்துக்கொள்ளப்பட்டன.

சிங்கப்பூரில் காணாமல் போன சிறுவன் ஆகாஷ் : நெற்றியில் திருநீர்.. கள்ளம்கபடம் இல்லாத முகம் – கண்டுபிடித்துத் தர “தமிழ் சாகா சிங்கப்பூர்” வாசகர்கள் இணைந்து செயல்படுவோம்

மாவட்ட நீதிபதி கமலா பொன்னம்பலம், 2017 முதல் 2018 வரையிலான ஏழு மாத காலப்பகுதியில் டான் 11 முதல் 18 வயதுக்குட்பட்ட 34 சிறுமிகளிடம் இதுபோல நடந்துகொண்டது அதிர்ச்சி அளிக்கிறது என்று கூறினார். கடந்த அக்டோபர் 2017ம் ஆண்டு கவர்ச்சிகரமான பெண்களை இன்ஸ்டாகிராம் மூலம் தேட துவங்கிய அந்த இளைஞன் அதன் பிறகு தான் இந்த தவறுகளை செய்ய துவங்கியுள்ளன என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

இணையம் என்பதும் நம் அறிவை வளர்க்கவே அன்றி பிறர் வாழ்க்கையை கெடுப்பதற்கு அல்ல என்பதை இளைஞர்கள் புரிந்து செயல்பட வேண்டும் என்று நீதிபதி கமலா பொன்னம்பலம் கூறியுள்ளார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts