TamilSaaga

“சட்டவிரோத மசாஜ் பார்லர்கள்” : சிங்கப்பூர் போலீஸ் நடத்திய அதிரடி ரைடு – 63 நிறுவனங்களில் 19 பெண்கள் கைது

சிங்கப்பூர் காவல் படை (SPF) சிங்கப்பூர் மசாஜ் ஸ்தாபனச் சட்டம் மற்றும் மசாஜ் ஸ்தாபன விதிகள் 2018ன் கீழ், அத்துமீறல்களை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் பார்லர்கள் மீது கடும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. SPF-ன் செய்தி வெளியீட்டின்படி, இந்த 2021ம் ஆண்டு அக்டோபர் 24 முதல் டிசம்பர் 11 வரை 159 மசாஜ் நிறுவனங்கள் அமலாக்கச் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன என்று சிங்கப்பூர் போலீஸ் படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் : “சிங்கப்பூரில் 4 உணவகங்களில் உணவருந்திய தம்பதி” : முதற்கட்ட சோதனையில் Omicron இருதப்பாக தகவல்

மொத்தம் 63 உரிமம் பெற்ற மற்றும் உரிமம் பெறாத மசாஜ் நிறுவனங்கள், அந்த மசாஜ் நிறுவனத்தில் தங்கள் ஊழியர்கள் பாலியல் சேவைகளை வழங்கவில்லை என்பதை உறுதிப்படுத்தத் தவறியதாகவும், அத்துடன் பெருந்தொற்று-ன் கீழ் விதிமீறல்களை மேற்கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் இரண்டு மசாஜ் நிறுவனங்களில் மசாஜ் சேவைகளை வழங்கும்போது, ​​மசாஜ் செய்பவர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முகமூடி அணியாததையும் காவல்துறை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

இந்த சோதனையின் போது மசாஜ் நிறுவனத்தில் இருந்து S$100 மற்றும் S$50 நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. அவற்றின் மொத்த மதிப்பு S$59,950 என்று SPFயின் செய்தி தொடர்பாளர் CNA செய்தி நிறுவனத்திடம் கூறினார். மேலும் இந்த அமலாக்க நடவடிக்கையில் “பாஸிங் கிஸ்” என்ற லூப்ரிகண்டின் நான்கு பாட்டில்கள், சில sex toysகள் மற்றும் இரண்டு பேக் ஆணுறைகளும் கண்டெடுக்கப்பட்டன. ஐந்து பெண்கள் மற்றும் ஒரு ஆண் வாடிக்கையாளரை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அமலாக்க சோதனையின் ஒரு பகுதியாக, மொத்தம் 63 உரிமம் பெற்ற மற்றும் உரிமம் பெறாத மசாஜ் பார்லர்கள் மசாஜ் நிறுவனங்கள் சட்டம் மற்றும் மசாஜ் ஸ்தாபன விதிகளின் கீழ் விதிமீறல்கள் செய்துள்ளதாக காவல்துறை நேற்று புதன்கிழமை செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

முன்னதாக, சைனாடவுனில் உள்ள மற்றொரு சட்டவிரோத மசாஜ் நிலையத்திற்கு செய்தியாளர்கள் சென்றுள்ளனர். ஆனால் மற்ற கடைகளைப் போலல்லாமல், இந்த ஸ்தாபனம் ஒரு கடையின் இரண்டாவது மாடியில் இயங்கியதற்கான அறிகுறிகள் கூட இல்லாமல் செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. ஆனால் அதன் உட்புறத்தில் பெண்களின் காலணிகள் அங்குமிங்குமாக சிதறி கிடந்தது, லூப்ரிகண்ட் மற்றும் கிரீம் பாட்டில்கள் கடை முழுவதும் சிதறிக்கிடந்தன.

இதுபோன்ற சட்டவிரோத மசாஜ் பார்லர்களில் உள்ள பெண்கள் தங்கள் பாலியல் சேவைகளை ஆன்லைனில் விளம்பரப்படுத்துவது வழக்கம் என்று கூறப்படுகிறது. SPF அளித்த தகவலின்படி பெண்கள் சாசன சட்டத்தின் கீழ் “பல்வேறு சந்தேகத்திற்குரிய குற்றங்களுக்காக” 27 மற்றும் 54 வயதுக்குட்பட்ட ஒரு ஆண் மற்றும் 19 பெண்களையும் போலீசார் கைது செய்தனர், என்று SPF தெரிவித்துள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts