TOTO லாட்டரியில் இந்த வாரத்தின் இரண்டாவது குலுக்கலில் சிங்கப்பூரை சேர்ந்த ஒருவர் 16 கோடி ரூபாயை வென்று இருக்கிறார். இந்த தகவலால் அவர் குறித்த விவரங்கள் இணையத்தில் அதிகம் தேடப்பட்டு வருகிறது.
சிங்கப்பூரின் அதிகாரப்பூர்வமாக நடத்தப்பட்டு வரும் பிரபலமான TOTO லாட்டரி. இந்த குலுக்கல் வாரம் இருமுறை நடைபெற்று வருகிறது. அதில் இந்த வாரத்திற்கான இரண்டாவது குலுக்கல் நேற்று (டிச.1) நடைபெற்றது. இதில், முதல் பரிசான Group 1ல் சிங்கப்பூரர் ஒருவருக்கு $2,735,946 சிங்கப்பூர் டாலர்கள் பரிசு கிடைத்துள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் 16 கோடி ரூபாயாகும்.
இந்த பரிசை தட்டி சென்றவர் சிங்கப்பூரை சேர்ந்த ஊழியராக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடனில் சிக்கி தவித்ததாகவும் தற்போது அதில் இருந்து விமோச்சனம் கிடைத்து விட்டதாகவும் அவர் கூறியதும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் கூறித்த மேலும் தகவல் விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
அதே போல், Group 2 எனப்படும் இரண்டாவது பரிசுத்தொகையாக $164,743 என அறிவிக்கப்பட்டு இருந்தது. இது இந்திய மதிப்பில் சுமார் 98 லட்சமாகும். இந்த பரிசை 2 நபர்கள் வென்றுள்ளனர். எந்த முறையும் இல்லாமல் இந்த குலுக்கலில் 2வது பரிசே மிகப்பெரிய தொகையாக உள்ளது.
மேலும், Group 3 பிரிவில் பரிசுத்தொகை $1,784 சிங்கப்பூர் டாலர். இது இந்திய மதிப்பில் 1 லட்ச ரூபாயாகும். இது 127 பேருக்கு கிடைத்துள்ளது. அடுத்து, Group 4வது பிரிவில் $313 சிங்கப்பூர் டாலர் பரிசுத்தொகை அறிவித்துள்ளனர். இது, 396 பேருக்கு கிடைத்துள்ளது. Group 5ல் $50 சிங்கப்பூர் டாலரை 6,675 பேர் பெற்றுள்ளனர். Group 6வது பிரிவில் $25 சிங்கப்பூர் டாலரை 10,358 பேர் பெற்றுள்ளனர். கடைசியாக Group 7ல் பரிசுத்தொகை $10 சிங்கப்பூர் டாலர். அது 123,423 பேருக்கு கிடைத்துள்ளது.
இந்த குலுக்கலில் வென்ற அனைவருக்கும் தமிழ் சாகா சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். TOTO லாட்டரியின் அடுத்த வார குலுக்கல் டிசம்பர் 5ந் தேதி நடைபெற இருக்கிறது.