TamilSaaga

“சிங்கப்பூரில் உரிமம் பெறாத KTV” : காவல்துறையின் அதிரடி ரெய்டு – 35 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை

சிங்கப்பூரில் பூன் லே வேயில் உள்ள TradeHub 21ல் உள்ள ஒரு யூனிட்டில் உரிமம் பெறாத கேடிவி நிறுவனம் இயங்குகிறது. இந்நிலையில் அங்கிருந்த 17 முதல் 34 வயதுக்குட்பட்ட 35 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யவுள்ளனர். அவர்கள் வசிக்கும் இடத்தை விட்டு வெளியேறி கட்டுப்பாடுகளை மீறியதாக அவர்கள் மீது நாளை புதன்கிழமை (செப்டம்பர் 22) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும். இன்று செவ்வாய்க்கிழமை வெளியான ஒரு அறிக்கையில், “இந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி 44 பேர் இந்த பிரிவில் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்களுக்கு பொது பொழுதுபோக்கு மற்றும் மதுபானம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சிங்கப்பூர் கடந்த ஆண்டு டிசம்பர் 28ம் தேதி பெருந்தொற்றின் 3-வது கட்டத்தில் நுழைந்தது, அதன் பிறகு எட்டு நபர்கள் மட்டுமே சமூகக் கூட்டங்களில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காலகட்டத்தில், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இரவு நேர விடுதிகள் கோவிட் -19 பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடித்து மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டன. மேலும் இந்த நடவடிக்கைகளில் வாடிக்கையாளர்கள் கடைகளுக்குள் நுழையும் முன் எதிர்மறையாக சோதித்திருக்க வேண்டுமென்றும் உணவு உண்ணும் தவிர எல்லா நேரங்களிலும் முகமூடிகளை அணிவதையும் உறுதிசெய்தது.

இதனையடுத்து செவ்வாய்க்கிழமை காவல்துறையினர் கூறுகையில், விசாரணை நடத்தப்பட்ட குழுவில் இருந்த 25 வயது நபருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் போலீசார் தற்போது அந்த குழுவிலிருந்து 20 முதல் 27 வயதுடைய எட்டு பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிங்கப்பூரில் தற்போது பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு இணங்காத குற்றவாளிகளுக்கு 10,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம். அல்லது ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts