TamilSaaga

“இந்திய வம்சாவளியை சேர்ந்த சிங்கப்பூர் பெண்மணி” – இனரீதியாக பேசி, தாக்கிய 30 வயது நபர் மீது வழக்கு பதிவு

சிங்கப்பூரில் கடந்த மே 2021ல் இந்திய வம்சாவளியை சேர்ந்த சிங்கப்பூர் பெண் மீது இனவெறியை தூண்டும் வகையில் செயல்பட்டதாக கூறப்பட்டவர் மீது கடந்த செப்டம்பர் 10ம் தேதியன்று அன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. மதர்ஷிப் வெளியிட்ட தகவலின்படி இந்த விவகாரம் குறித்த குற்றப்பத்திரிகையில் வோங் ஜிங் ஃபாங் என்ற 30 வயது நபர் தாமாக முன்வந்து பாதிக்கப்பட்ட ஹிண்டோச்சா நிதா விஷ்ணுபாய் என்பவர் மீது இனரீதியான மோசமான தாக்குதலை செய்ததாக கூறப்படுகிறது.

வோங் கடந்த மே 7, 2021 அன்று தனது வலது காலை பயன்படுத்தி 55 வயதான நிதா விஷ்ணுபாய்யின் மார்பு பகுதியில் உதைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் நிதாவை இனரீதியாக அவர் மனதை புண்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் மே 7 அன்று காலை 8:45 மணியளவில், சோவா சூ காங் டிரைவ் வழியாக நார்த்வேல் காண்டோமினியம் அருகே ஒரு பாதுகாக்கப்பட்ட நடைபாதையில் நடந்துள்ளது. கடந்த கால அறிக்கைகளின்படி, நிதா நடைபாதையில் வேகமாக நடந்து சென்றபோது, ​​வோங் அவரை தடுத்துள்ளார்.

வாக்கிங் சென்று வியர்வை வந்த நிலையில் அந்த பெண்மணி தனது மாஸ்க்கை தாடை பகுதிக்கு கீழிறக்கியுள்ளார். அப்போது வோங் மாஸ்க்கை மீண்டும் சரியாகப் போடும்படி சத்தமிட்டுள்ளார். “நான் உடற்பயிற்சி செய்துகொண்டுருக்கிறேன்” என்று அந்த பெண்மணி கூறியும் அவர் தொடர்ந்து கத்தியுள்ளார். இதனை தவிர்க்க நிதா அங்கிருந்து நகர்ந்து தொடர்ந்து நடந்த நிலையில் அந்த நபர் அவர் நெஞ்சுப்பகுதியில் உதைத்துள்ளார். அதனால் நிலைகுலைந்த பெண்மணியை கையில் கீறல்கள் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பேஸ்புக் பதிவில், பிரதமர் லீ “சிங்கப்பூரில் நடந்த இனவெறித் தாக்குதல் “மிகவும் ஏமாற்றம் மற்றும் கவலையை அளிக்கிறது” என்று பகிர்ந்து கொண்டார். மேலும் பல தலைவர்களும் இந்த நடவடிக்கைக்கு தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். தற்போது அந்த நபர் மீது வழக்கு நடைபெற்று வருகின்றது.

Related posts