TamilSaaga

சிங்கப்பூரின் இரண்டு “அன்னை தெரசா”.. வேலையை செஞ்சா சாப்பாட்டில் கைவைக்க முடியாது.. சகிப்புத்தன்மையின் உச்சம்! – சிங்கையின் ஒவ்வொரு ஆண்களின் சார்பாக “Royal Salute”

நாம் வாழ்கின்ற இந்த உலகில் எந்த வேலையும் எளிதானது அல்ல என்றே கூறலாம், அதிலும் குறிப்பாக இன்றைய காலகட்டத்தில் எந்த வேலைக்கும் ஆண் பெண் என்ற பேதம் கிடையவே கிடையாது. ஆனால் உளவியல் ரீதியாக பார்க்கும்பட்சத்தில் சில வேலைகளை செய்ய பெண்கள் ஆரம்பகட்டத்தில் தயங்கி வந்தனர். ஆனால் அந்த தயக்கம் என்று காணாமல் போய்விட்டது என்றே கூறலாம், அந்த வகையில் சில நேரங்களில் சில ஆண்கள் கூட செய்ய பயப்படும் வேலைகளை பெண்கள் சர்வசாதாரணமாக செய்கின்றனர். அதற்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர்கள் தான் இந்த சிங்கப்பூர் பெண்கள்.

சிங்கப்பூரின் Sarah Ang மற்றும் Nicole Chong இவ்விரும் பெண்களும் சிங்கப்பூரின் Embalming நாயகிகள் என்றால் அது மிகையல்ல. “Embalming” தமிழில் இதை பதனிடுதல் என்று கூறலாம், Sarah மற்றும் Nicole பதனிடுவது இறந்த மனித உடல்களைத் தான். பிரபல செய்தி நிறுவனம் ஒன்று இவர்களை போட்டிக்கான சென்றபோது இவர்கள் சொன்ன முதல் பதில் இளகிய மனம் படைத்தோருக்கு இந்த Embalming பணி சரிவராது என்பது தான். சிங்கப்பூரில் உள்ள Serenity Casket and Funerals தான் Sarah தனது வாழ்க்கையை துவங்கிய இடம். அது அவருடைய தந்தையின் Embalming நிலையம்.

இறந்த உடல்கள் அடக்கம் செய்ய்யப்படும் வரை சிதைந்துவிடாமல் இருக்க செய்யப்படும் சில கெமிக்கல் செயல்பாடுகள் தான் இந்த Embalming. சிங்கப்பூரின் Coffin King என்று அழைக்கப்படும் Ang Yew Sengன் இளைய மகளான Sarah தந்தையிடம் இருந்து அனைத்தையும் கற்றுக்கொண்டார். அவருடைய காலத்திற்கு பிறகு அவர் தான் தற்போது இந்த தொழிலாளி முன்னெடுத்து செல்கிறார். நியூஸிலாந்து நாட்டில் சிறப்பாக Embalming படித்துமுடித்த Sarah தாயகம் திரும்பினார். அவர் நாடு திரும்பியதும் அவரது உறவுக்கார பெண்ணான Nicole, எனக்கு இதை கற்றுக்கொடு என்று கேட்க, அதன் விளைவாக இன்று இந்த இரு பெண்களும் சிங்கப்பூர் Embalming ராணிகளாக திகழ்கின்றனர்.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் திடீரென பழுதான கேபிள் கார் பாதை.. உயிரை கையில் பிடித்துக்கொண்டு அந்தரத்தில் தொங்கிய 18 பயணிகள் – என்ன நடந்தது?

இரண்டாக பிளந்த தலையோடு வந்த உடல்

தினமும் பலவிதமான உடல்களை இந்த இரு பெண்களும் embalming செய்கின்றனர், அதில் குறிப்பாக ஒரு நாள் தற்கொலையில் ஈடுபட்டு இறந்த ஒருவரின் உடல் தலை இரண்டாக பிளந்த நிலையில் அவர்களிடம் வந்துள்ளது. படிக்கும்போதே நமக்கு தலைசுற்றுகிறது என்று தான் கூறவேண்டும், ஆனால் அந்த உடலின் தலையை வழக்கமான நூல் போலல்லாமல் Dental Flossன் செய்ய பயன்படும் அந்த நூல் போன்ற பொருளை கொண்டுதான் தைத்தோம் என்று கூலாக கூறுகிறார் Sarah. அந்த தலையின் இரு பக்கங்களை இணைப்பதற்கு பல மணிநேரம் ஆனது என்றும் Nicole தெரிவித்தார்.

பெருந்தொற்று தந்த சவால்

பெருந்தொற்று காலத்தில் உடல்களை Embalming செய்வது என்பது மிகவும் கடினமான விஷயம், இறந்த உடல்களை Embalming செய்வது போல பெருந்தொற்றால் இறந்தவர்களின் உடலை பதப்படுத்த முடியாது. மருத்துமனையில் இருந்து வரும் பெருந்தொற்று பாதித்த உடல்களை Make-Up மற்றும் கழுவுதல் போன்ற செயல்களை செய்ய மட்டுமே அனுமதி அழைக்கப்படும். அதே போல சில நேரங்களில் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி 28 நாட்கள் ஆனா பிறகு இறந்தவர்களின் உடல்களை பயமின்றி Embalming செய்யலாம், நாங்களும் செய்துள்ளோம்.

என்னால் மறக்கமுடியாத புழுக்கள் ஊறிய உடல்

Sarah மற்றும் Nicole இதை சொல்ல ஆரம்பிக்கும்போதே நம் குடல் இடம்மாறுகிறது என்று தான் கூறவேண்டும். ஒருமுறை அவர்கள் நிலையத்திற்கு Embalming செய்ய வந்த உடலின் “தலையிலிருந்து புழுக்கள் வெளியேறுவதை” கண்டுள்ளார் அவர். அந்த அளவுக்கு உடல் மிகவும் மோசமாக சிதைந்த ஒரு சம்பவத்தை நான் பார்த்ததில்லை என்றும் கூறினார் Sarah. இதைவிட மோசமான மோசமான பகுதி என்னவென்றால் அந்த உடலைப் புரட்டியபோது, ​​“முதுகு முழுவதும் புழுக்களேயன்றி சதையே இல்லை” என்றார் Sarah சர்வசாதாரணமாக. ஆனால் அன்று உடலில் இருந்து வெளியேறிய நாற்றம் இன்றளவும் என்னால் மறக்க முடியவில்லை என்று கூறினார்.

குடும்பத்தையும் நாங்கள் மறக்கவில்லை

ஒரு நாளுக்கு சுமார் 5 உடலகை Embalming செய்யும் இந்த அசாத்திய பெண்கள் தங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிடவும் மறப்பதில்லை. ​​ஆங் மற்றும் சோங் எப்போதும் தங்கள் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட முயற்சி செய்கிறார்கள். நான்கு மற்றும் இரண்டு வயதுடைய இரண்டு மகள்களைக் கொண்ட சோங், தனக்கு ஓய்வு கிடைக்கும் போது அவர்களோடு நேரத்தை செலவிட்டு வருகின்றார். உண்மையில் தலைசுற்றவைக்கும் இந்த வேலையில் இருந்துகொண்டு நல்ல தாய்மாராகவும் திகழ்ந்து வரும் இந்த பெண்களுக்கு ஒரு ராயல் Salute போடலாம்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts