TamilSaaga

சிங்கப்பூரில் அறிமுகமாகும் புதிய ரோபோட்.. கீன்போட் சிறப்பம்சங்கள் என்ன? – முழு விவரம்

சிங்கப்பூரில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 21) சாஃப்ட் பேங்க் ரோபாட்டிக்ஸ் குரூப் (SBRG) மற்றும் கீனான் ரோபாட்டிக்ஸ் ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு அறிவிப்பின்படி சந்தையில் புதிய ரோபோக்களுடனான சேவையை அறிமுகம் செய்தது.

SBRG என்பது ஜப்பானிய ரோபாட்டிக்ஸ் நிறுவனமாகும், இது 70 க்கும் மேற்பட்ட நாடுகளில் ரோபோக்களைப் பயன்படுத்துகிறது. ஷாங்காயை தளமாகக் கொண்ட கீனான் உட்புற நுண்ணறிவு சேவை ரோபோக்களில் தற்போது கவனம் செலுத்துகிறது.

கீன்போட், உணவு அல்லது போக்குவரத்து ஆர்டர்களை கடைகளிலிருந்து சேகரித்து அவற்றை வழங்கும் செயல்களை செய்யக் கூடியது. இது எஸ்பிஆர்ஜி மற்றும் கெனான் ரோபாட்டிக்ஸ் இடையேயான கூட்டு வெற்றியாகும்.

இந்த கீன்போட் என்ற ரோபோவை இந்த கூட்டமைப்பினர் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளார்கள். தட்டுகளை ஏந்திய இது உணவகங்களில் ஒரே நேரத்தில் நான்கு உணவுகள் வரை உணவை வழங்க பயன்படும். ரோபோ, தடைகளைத் தவிர்ப்பது மற்றும் ஸ்மார்ட் திட்டமிடல் அமைப்புகளைக் கொண்டுள்ளது, தற்போதுள்ள சேவை குழு வாடிக்கையாளர் சேவை போன்ற பிற அம்சங்களில் கவனம் செலுத்த அனுமதிக்கும் திறன் பெற்றது.

கிராப் சிங்கப்பூரின் நிர்வாக இயக்குனர் திரு யீ வீ டாங் செவ்வாய்க்கிழமை “நிறுவனம் 20 க்கும் மேற்பட்ட உணவு மற்றும் பான பிராண்டுகளைக் கொண்ட கிளவுட் சமையலறையான ஹில்வியூவில் உள்ள கிராப் கிட்சனில் சேவை ரோபோக்களை அறிமுகப்படுத்துகிறோம்” எனக் கூறினார்.

மேலும் “எங்கள் செயல்பாடுகளின் சுறுசுறுப்பை மேம்படுத்தவும், ரோபோக்களின் உதவியுடன் மீண்டும் மீண்டும் மற்றும் கைகளை பயன்படுத்தும் செயல்முறைகளை குறைக்கவும் எண்ணுக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

Related posts