TamilSaaga

சிங்கப்பூர் MRT.. பயணிகளின் பயணத்தை இனிமையாக்க புதிய நடவடிக்கை – 2 வருட Project, கையிலெடுத்த LTA மற்றும் MRT

வரும் பிப்ரவரி 18 முதல், வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு மற்றும் Circle லைன்களில் உள்ள 30 SMRT, MRT நிலையங்களில் உள்ள கழிவறைகளை படிப்படியாக சீரமைக்க SMRT மற்றும் LTA ஆகிய இரண்டும் இணைந்து செயல்படும் என்று கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பயணத்தை மிகவும் இனிமையானதாக மாற்றுவதற்கான தற்போதைய முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் மற்றும் இந்த பணிகள் Yishun மற்றும் Raffles Place நிலையங்களில் இருந்து தொடங்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“சிங்கப்பூர் உள்பட 82 நாடுகள்” : இந்தியா அளித்த தளர்வுகள் என்னென்ன? – எப்போது அமலாகும்? Detailed Report

LTA அளித்த தகவலின்படி, இந்த மேம்படுத்தப்பட்ட கழிவறைகள் சிறந்த காற்றோட்டம், Anti-Slip டைல்ஸ், அதிக ஆற்றல் திறன் கொண்ட விளக்குகள் மற்றும் நீர் சேமிப்பு குழாய்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்று தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் சீரமைக்கப்படும் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் சராசரியாக 2.5 மாதங்களுக்கு மூடப்படும் என்பதையும் பயணிகள் நினைவில்கொள்ளவேண்டும்.

“சிங்கப்பூர் NUS பல்கலைக்கழக வளாகம்” : இறந்து கிடந்த 19 வயது வெளிநாட்டு மாணவி – போலீசார் தீவிர விசாரணை

LTA தங்களுடைய முகநூல் பதிவில் இதுகுறித்த கூடுதல் தகவல்களையும், அந்த 30 நிலையங்கள் குறித்த தகவல்களையும் தெளிவாக அளித்துள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts