TamilSaaga

பிளாஸ்டிக் எனும் அரக்கன்…. சிங்கப்பூரில் Palawan Beach-ல்… தலையில் பிளாஸ்டிக் கவர் சிக்கி… இறந்து கரை ஒதுங்கிய சுறா!

SINGAPORE: சிங்கப்பூரில் உள்ள Palawan Beach-ல் Blacktip reef சுறா ஒன்று, தலையில் பிளாஸ்டிக் கவர் சுற்றப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது.

இதுகுறித்து, சென்டோசா டெவலப்மென்ட் கார்ப்பரேஷனின் சுற்றுச்சூழல் மேலாண்மைக் குழுவின் துணை மேலாளரான டாமி லிம், பலவான் கடற்கரையில் தினசரி பாதுகாப்பு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அவர்களது கடற்கரை செயல்பாட்டுக் குழுவினர் கண்டெடுத்த சிறிய சுறாவின் சடலத்தின் பல புகைப்படங்களை Facebook இல் பகிர்ந்துள்ளனர்.

நேரடியாக கடற்கரைக்கே சென்ற டாமி லிம், அந்த மீன் Blacktip reef சுறா என்பதை கண்டறிந்தார்.

மேலும் படிக்க – 2 வருட உழைப்பு… 42 கிலோ எடை குறைப்பு – சிங்கப்பூரில் கிண்டல் செய்தவர்கள் முன் இரண்டே வருடத்தில் அழகு தேவதையாக உருமாறிய பெண்!

இதுகுறித்து அவர் மதர்ஷிப் செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “இந்த இளம் சுறா அலை குறையும் போது மணலில் சிக்கி, இறுதியில் அங்கேயே இறந்துவிட்டதாக தெரிகிறது. அதன் தலைப்பகுதியில் ஒரு பிளாஸ்டிக் சுவர் சுற்றப்பட்டிருந்தது. அந்த சுறா, பிளாஸ்டிக் கவரில் சிக்கி அதிலிருந்து விடுபட முடியாமல் தவித்திருக்கலாம்.

இறந்து போன சுறா, லீ காங் சியான் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் (LKCNHM) ஒப்படைக்கப்பட்டது, அங்கு அது ஆராய்ச்சி மற்றும் கல்வி நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் என்று லிம் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற சிங்கப்பூரின் அனைத்து முக்கிய செய்திகளையும் தமிழில் படிக்க, “தமிழ் சாகா சிங்கப்பூர்” முகநூல் பக்கத்தை Follow பண்ணுங்க

Related posts