TamilSaaga

“லாரன்ஸ் வோங் எனும் நான்…” சிங்கப்பூரின் புதிய துணை பிரதமராக பதவியேற்கும் “சிம்மக்குரலோன்” – 50 லட்சம் மக்களின் “பேராதரவு” குரல்

நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் வரும் ஜூன் 13 முதல் சிங்கப்பூரின் துணைப் பிரதமராக பதவி உயர்வு பெறுகிறார். சிங்கையின் நான்காம் தலைமுறைக் குழுவின் (4G) தலைவராக நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் (Lawrence Wong) தேர்வு செய்யப்பட்ட நிலையில், தற்போது அவர் துணை பிரதமராக பதவியேற்க உள்ளார்.

லாரன்ஸ் வோங், கடந்த 10 ஆண்டுகளில் தன்முன்னே இருந்த அனைத்து சவால்களையும் உடைத்தெறிந்துள்ளார். அதை மிக சாதுர்யமாக கையாண்டதன் விளைவாகவே, அமைச்சர்கள் மத்தியில் அவருக்கு தனி மாஸ் உருவாகியிருக்கிறது. இதுவே, சிங்கப்பூரின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பையும் அவருக்கு பிரகாசமாக்கியுள்ளது.

குறிப்பாக, பெருந்தொற்று நேரத்தில் அவரது செயல்பாடுகள் சக அமைச்சர்கள் மட்டுமின்றி, அவருக்கு கீழ் வேலை செய்யும் அதிகாரிகளையும் வியக்க வைத்தது.

மேலும் படிக்க – திருச்சி ‘டூ’ சிங்கப்பூர்.. 2022-ல் இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்த டிக்கெட் விலை – 100 டாலரை விட குறைவு – சர்பிரைஸ்!

கல்வி அமைச்சகம், தேசிய வளர்ச்சி, தகவல் தொடர்பு அமைச்சகம், கலாச்சாரம், சமூக, இளையர் அமைச்சகம், தற்காப்பு ஆகியவற்றில் அவர் தனது நிர்வாக திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

அதுமட்டுமின்றி, சிங்கப்பூர் நாணய வாரியத்தின் துணைத்தலைவர், GIC வாரிய உறுப்பினர், மக்கள் செயல்கட்சியின் சமூக அறநிறுவனத்தின் தலைவர் என்று பல்வேறு துறைகளில் தனது ஆளுமைகளை லாரன்ஸ் வோங் வெளிப்படுத்தியுள்ளார்.

“நீங்கள் அவரைப் பார்க்கும்போது, ​​அவர் ஒரு தலைவர் என்று உணருவீர்கள். அவர் மிகவும் அமைதியானவர், நட்புடன் பழகுவார், எளிதில் மிகவும் அணுகக்கூடிய நபர், மென்மையானவர், புதிய தலைமுறையினரை ஈர்க்கக்கூடியவர்” என்று வோங் மீதான ஆதரவு வார்த்தைகள் சிங்கப்பூரில் இப்போதே ஒலிக்கத் தொடங்கிவிட்டன. 55 லட்சத்துக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட சிங்கப்பூரில், பெரும்பாலானோரின் குரலாக லாரன்ஸ் வோங் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts